பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow கருணாவின் அந்தரங்கம் 2
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணாவின் அந்தரங்கம் 2 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 April 2006
தமிழீழத் தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்த அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருனாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும்; ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார்.இதற்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் கருனாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருனா உன்மீது ஒரு சில முறைப்பாடுகள் வந்துள்ளன. அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைக்கப்பட்டார்.

நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருனா வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் கருனா ஈடுபட்டார்.

இத்தருணம் கருனாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருனா படுமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தைக் குணப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். மருத்துவ மனையில் தங்கியிருந்த கம்சனுக்கு மருத்துவர்களில் ஒருவர் கருனாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருனா அனுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை கருனா போடுகிறார்.

இந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருனா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

நிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்து கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.

கருனாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.

கருனாவுக்கு சற்று நின்மதி இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு. அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என சிந்திக்கிறார்.  (தொடரும்)

தகவல் - சுழியன்


eddapar
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..