|
சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொடூரப் படுகொலைக்கு பழி வாங்கியே தீருவோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:
சாவகச்சேரி கனகம்புளியடிக்கு இடைப்பட்ட தபால் நிலைய வீதிப் பகுதியில் மிகவும் திட்டமிட்ட வகையில் 17.04.2006 அன்று இராணுவத்தினரின் அதிகண்காணிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வெடிபொருள் பொருத்தி வைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அப்பாவி பொதுமக்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்புக்களையும், குழப்பத்தையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் நோக்கம் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதேயாகும். இத்தாக்குதலில் இருவர் பரிதாபகரமாக கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமுற்றுள்ளனர். இதற்கு எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவ்வாறான கொடூர முகம்கொண்ட சிங்கள பேரினவாத படைகளுக்கு எதிராக பழிக்குப்பழி எமது பதில் தாக்குதல்கள் தொடர்ந்தே தீரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருடல் இணையம்
|