பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சமாதான நடவடிக்கைகளுக்கு குறுக்கே நிற்கும் நந்திகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 April 2006

விடுதலைப் புலிகள் தமது கிழக்கு மாகாணத் தளபதிகளும் போராளிகளும் வன்னிக்கு வந்து திரும்புவதற்கு தனியார் ஹெலிக்கொப்டர்களைப் பயன்படுத்தும் யோசனையை ஏற்கமாட்டார்கள் என்பது ஓராளவுக்கு உறுதியாகி விட்டது.

நோர்வேயின் அனுசரணைப் பணிக்குப் பொறுப்பான விசேட தூதுவர் ஜான் ஹன்ஸன் போவர் இன்று கிளிநொச் சியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைச் சந்திக் கும்போது, புலிகளின் இந்த முடிவு போவருக்குத் தெரியப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், அடுத்த சுற்று அமைதிப் பேச்சுகள் விரை வில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின் றன.
இந்த இக்கட்டு நிலையில் அடுத்தது என்ன என்று கேள்வி எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி முற்பகுதியில் நில விய, அசாதாரண சூழ்நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
மீண்டும் நிழல் யுத்தம் தீவிரமடையும் ஏதுநிலை புலப்படு கின்றது. தற்போதைய நிழல்யுத்தம் மேலும் உக்கிரமடைந்து நிஜ யுத்தமாக வெடிக்கும் ஆபத்தும் தோற்றாமல் இல்லை.
விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்குச் செல்ல இணங் காததால்தான் இந்த நிலைமை என்று தெற்கிலும் சர்வதேச ரீதியிலும் சில தரப்புகளால் குற்றம் சுமத்தப்படுகின்றது.
உண்மை நிலையை - கள யதார்த்தங்களை - புரிந்து கொள் ளாமல் முன்வைக்கப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் இவை.
இரண்டு தசாப்தகாலக் கொடூரப் போரில் பேரழிவுகளை ஏற்படுத்தி மோதிக் கொண்ட இரண்டு தரப்புகள் அமைதிப் பேச்சு மேசைக்கு செல்ல வேண்டுமாயின் அதற்கான புறச் சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அமைதிப் பேச்சு களை ஒட்டி விட்டுக்கொடுப்புடன் விடயங்களை அணுகும் முனைப்பை இரு தரப்பும் வெளிப்படுத்தவேண்டும். பரஸ் பரம் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் மனப்பாங்கு இரு தரப்பிடமும் இருக்கவேண்டும்.
இவை இல்லாமல், பேச்சு மேசைக்குப் போய் அங்கும் மோதிக் கொள்வதில் அர்த்தமில்லை.
தீர்வு காணும் இலக்கோடு அல்லாமல், எதிர்த்தரப்பைத் தீர்த்துக் கட்டும் நோக்கோடு பேச்சு மேசைக்குச் செல்வது வெறும் அபத்தமின்றி வேறில்லை.
மஹிந்தரின் புதிய அரசோடு விடுதலைப் புலிகள் கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடத்திய முதல் சுற்றுப் பேச்சு அத்தகைய புறச்சூழலில்தான் நடந்தது. அந்த மேசையில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் காட்டப் படும் உதாசீனம் கூட அந்தப் போக்கிலிருந்து சம்பந்தப்பட் டோர் விடுபடவேயில்லை என்பதையே தெளிவுபடுத்து கின்றது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த யுத்த நிறுத்த காலத்தில் முதலில் ரணிலின் அரசினாலும், பின்னர் கடும் போக்குடன் நடந்து கொண்ட சந்திரிகாவின் அரசினா லும் கூட புலிகளின் கிழக்குத் தளபதிகளின் போக்குவரத் துக்கு விமானப் படை ஹெலிக்கொப்டர் வசதி மறுக்கப்படா மல் அவ்வப்போது பல தடவைகள் வழங்கப்பட்டன.
இப்போது அதை வேண்டுமென்றே ஒரு பெரிய விவகார மாக்கி, அந்த வசதியை வழங்க மறுத்து, அதன்மூலம் புலிகள் மீதான தனது விரோத மனப்பான்மையை வெட்ட வெளிச்ச மாக வெளிப்படுத்தியிருக்கின்றது மஹிந்தரின் அரசு.
ஒரு புறம், சாதாரண ஹெலிக்கொப்டர் வசதி கூட வழங் கப்பட முடியாத எதிரியாக விடுதலைப் புலிகளை நடத்தும் பகையுறவுப் போக்கு-
மறுபுறம் ஒட்டுப்படை நடவடிக்கைகள் மூலம் தொடரும் நிழல் யுத்தம்-
இன்னொரு புறம் தமிழர்களுக்கு எதிரான இனவன் முறைக் கொடூரத்தைக் கட்டவிழ்த்து பேரினவாதம் புரியும் அராஜகம் -
இவை போதாதென்று விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கோரி அவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் நிர்வாக இயந்திரம் சர்வதேச ரீதியில் முழு மூச்சுடன் முடுக்கி விட்டிருக்கும் சூறாவளி பிரசாரம் -
இவ்வளவையும் ஏமாளிகள் போல் பார்த்துக்கொண்டு வாளாவிருந்து விட்டு பேச்சு மேசைக்குப் புலிகள் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றதா சர்வதேச சமூகம்?
அமைதிப் பேச்சுகள் - சமாதான முயற்சிகள் - ஆக்கபூர்வ மான திசையில் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. அதைத் திரும்பத் திரும்ப இப்பத்தி யில் பலதடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.
போர், சமாதானம் என்ற இரண்டு தோணிகளில் கால் வைத்துக் கொண்டு அமைதிப் பயணத்தை முன்னெடுக்க முடியாது. அதைத் தென்னிலங்கை அரசுத் தலைமை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னால் நந்தியாக யுத்தவாதிகளையும், பேரினவாதிகளையும் தென்னி லங்கை அரசுத் தரப்பு நிறுத்தி வைத்திருக்கும் வரையில் அமைதி முயற்சிகள் முன்நகரப் போவதில்லை என்பது நிச்சயம்.
அமைதிப் பேச்சுக்களுக்கான பொருத்தமான புறச்சூழல் ஏற்படுவதற்கு இந்த யுத்த வெறியர்களும், பேரினவாதத் தீவிரவாதிகளும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் உறுதி.
சமாதான எத்தனங்களுக்குக் குறுக்கே நிற்கும் இந்த நந்திகளை விலக்கி வைத்து, சமாதான தரிசனம் கிட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பொறுப்பு மஹிந்தருடையது. செய்வாரா அவர்?
uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..