பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow இராணுவத் தலைமையகத்தினுள் இலக்கு வைக்கப்பட்ட இராணுவத் தளபதி!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இராணுவத் தலைமையகத்தினுள் இலக்கு வைக்கப்பட்ட இராணுவத் தளபதி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 April 2006

** தற்கொலைக் குண்டுத்தாரி தொடர்பாக பதில் கிடைக்காத கேள்விகள்! **

இலங்கையில் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. அதிஉச்ச பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளமை இராணுவத்தை மட்டுமன்றிஇ அரசையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இராணுவத்தின ரையே ஏமாற்றி இராணுவத் தலைமை யகத்தினுள் நுழைந்ததுமல்லாதுஇ இராணுவத் தளபதியை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுதாரி தாக்கியுமுள்ளார். நாட்டில் போர் நிறுத்த உடன்பாடு அமுலிருந்தாலும் கொலைகள் தொடர்கின்றன. கிழக்கில் புலிகளுக்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட நிழல் யுத்தம் இன்று தலைநகரில் தாக்குதல் நடைபெறுமளவிற்கு நிலைமையை மோச மடையச் செய்துள்ளது. இவற்றுக்கான அடிப்படைக் காரணங்கள் இதுவரை உணரப்படாததால் படுகொலைகள் தொடர்கின்றன.

கிழக்கில் நிழல் யுத்தத்தின் சூத்திரதாரிகள் யாரென்பது அனைவரும் அறிந்த விடயம். இராணுவ புலனாய்வுப் பிரிவே கருணா குழுவை பயன்படுத்தி அனைத்தையும் செய்கிறது எனத் தமிழ் தரப்புகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில் அது திருகோணமலைஇ வவுனியாஇ யாழ்ப்பாணமென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுகளுக்குப் பின்னர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் இராணுவத்தினரும் அவர்களது வழிகாட்டலில் செயற்படும் ஆயுதக் குழுக்களுமே காரணமென புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். வடக்கு - கிழக்கில் இடம்பெற்று வரும் மரண தண்டனைப் பாணியிலான கொலைகள் மக்களை அச்சத்திலும் பீதியிலும் உறைய வைத்துள்ளது. படுகொலை மூலமான ஒரு உளவியல் போரும் வடக்கு - கிழக்கில் முன்னெடுத்துச் செல்லப்படுவதால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவத் தலைமையகத்தினுள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கர்ப்பிணியைப் போல் வேடமிட்ட பெண்ணொருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக முதலில் கூறப்பட்டாலும் அவரொரு கர்ப்பிணிப் பெண்தானென தற்போது விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. நாட்டில் அதி உச்ச பாதுகாப்பு நிறைந்த அரணுக்குள் இந்தப் பெண் எப்படிப் புகுந்தாரென்பதுதான் மிகப் பெரும் கேள்வியாகும். அன்றுதான் முதல் தடவையாக இவர் இராணுவத் தலைமையகத்தினுள் வந்தாரா அல்லது ஏற்கனவே இங்கு பல தடவைகள் வந்துள்ளாரா என்பது பற்றியெல்லாம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இராணுவத் தளபதியை இராணுவத் தலைமையகத்தினுள் இலக்கு வைப்பதென்பது மிகவும் துணிச்சல் மிக்க செயல். முதல் தடவையாக அன்றுதான் இந்தப் பெண் இராணுவத் தலைமையகத்தினுள் நுழைந்திருந்தால்இ அவரால் இலக்கை நோக்கி இலகுவாக செயற்பட்டிருக்க முடியாது. ஏற்கனவே சில தடவையாவது அங்கு வந்திருந்தால்தான் இலக்கை எங்கு வைத்து எப்படித் தாக்குவதென்பதை அவரால் தீர்மானித்திருக்க முடியும்.

இதற்காக அவர் இராணுவத் தலைமையகத்தினுள் சில தடவைகளாவது வந்திருந்தால்இ ஒவ்வொரு தடவையும் கர்ப்பிணி போல் வேடமிட்டு வருவதும் சுலபமல்ல. ஏனெனில்இ ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அங்கு நடைபெறும்இ இராணுவ அதிகாரிகளின் கர்ப்பிணி மனைவிமாருக்கான சிகிச்சையின் போது உள்ளே வந்துவிட்டு டாக்டரை சந்திக்காது செல்வது அங்குள்ள அனைவருக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துமென்பதால் இவர் உண்மையிலேயே கர்ப்பிணிப் பெண்ணாயிருந்து இராணுவ ஆஸ்பத்திரி கிளினிக்கில் சிகிச்சை பெற்றிருப்பதாகவே விசாரணையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரம்இ அவர்கள் முக்கிய கேள்வியொன்றையும் எழுப்புகின்றனர். இராணுவ அதிகாரிகளின் மனைவிமார்களுக்கான சிகிச்சைக்காகஇ இராணுவத்துடன் சம்பந்தப்படாதவொரு பெண் எப்படி அனுமதி பெற்றார் என்பதே அதுவாகும். ஒரு இராணுவச் சிப்பாயென்றாலென்னஇ அதிகாரியென்றாலென்ன அவர்களது மனைவிமார் இராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு பல நடைமுறைகளுள்ளன. அந்த அதிகாரி கடமையாற்றும் படையணியின் மேலதிகாரிகளால் சிபார்சு செய்யப்பட்ட கடிதங்களும் அதற்கான இறப்பர் முத்திரைகளும் குத்தப்பட வேண்டும்.

அத்துடன்இ அந்தப் பெண்ணின் கணவர் பற்றிய (இராணுவ அதிகாரி) விபரமும் ஆரம்பத்தில் இராணுவ ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்தி பதிவுகள் செய்யப்பட வேண்டும். இதனால் தான் இந்தப் பெண் இராணுவ எழுதுவினைஞரொருவரின் மனைவி போல் இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதேநேரம்இ இவருக்கு மிக நன்றாகவும் இலகுவாகவும் சிங்களத்தில் உரையாடத் தெரிந்துள்ளது. கிளினிக்கில் டாக்டர்கள்இ நர்ஸ்கள் சக அதிகாரிகளின் மனைவிமாருடன் சந்தேகத்திற்கிடமின்றி உரையாடியிருந்ததும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்இ கிளினிக்கின் ஆரம்பத்தில் அதற்கான அனுமதியைப் பெற வழமையாக இராணுவ அதிகாரிகளே தங்கள் மனைவிமாரை இந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவார்களென்பதால் அவ்வாறு வராது இவர் இந்தக் கிளினிக்கில் சேர்வதற்கான அனுமதியை எப்படி பெற்றார் என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரம்இ கிளினிக்கிற்கு வரும் அதிகாரிகளின் மனைவிமார் இராணுவ தலைமையக வாசலுக்கு வரவேண்டும். அங்கு வழமையான சோதனைகள் முடிவடைந்ததும் இராணுவத்தினரே பிரதான வாசலிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு இவர்களை தங்கள் பஸ்களில் ஏற்றிச் சென்று இறக்குவர். எனினும்இ இராணுவ தலைமையக பிரதான வாசலுக்கு தங்கள் மனைவிமாரை அதிகாரிகள் தங்கள் தங்கள் வாகனங்களில் கூட்டி வந்துவிட்டு கிளினிக் முடிந்து திரும்பும் போதும் வாசலுக்கு வந்து கூட்டிச் செல்வார்களென்பதால்இ இந்தப் பெண் எப்படி வந்து எப்படிச் சென்றார் என்பது பற்றியெல்லாம் தீவிர விசாரணைகள் நடக்கிறது. இதைவிடஇ இராணுவத் தளபதியை வேறு இடங்களில் இலக்கு வைப்பதைவிட இந்தப் பெண் ஏன் இராணுவத் தலைமையகத்தினுள் இலக்கு வைக்கத் தீர்மானித்தார் என்ற கேள்வியும் எழுகிறது. வேறிடத்தில் இலக்கு வைப்பதை விடஇ இராணுவ தலைமையகத்தினுள் இலக்கு வைப்பதென்பது மிக மிகக் கஷ்டமான காரியம்.

இராணுவத் தளபதியை வெளியே இலக்கு வைப்பது மட்டுமே கடினமான காரியம். ஆனால்இ அவரை அவரது தலைமையகத்தினுள் இலக்கு வைப்பதென்றால்இ முதலில் இராணுவத் தலைமையகத்தினுள் நுழைய மிகப் பெரும் ஹரிஸ்க்' எடுக்க வேண்டும். அதன்பின் மிகவும் பாதுகாப்பு நிறைந்த அந்த இடத்தினுள் இலக்கு வைக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கக் கூடிய காரியமா எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனினும்இ இவையெல்லாம் நடைபெற்றுள்ளன. இராணுவத் தலைமையகமென்பது மிகவும் பாதுகாப்பான பகுதி. அதன் வெளிப்புறங்களில் இருக்கும் பாதுகாப்புஇ உட்புறங்களில் இருப்பதில்லையென்பதால் உள்ளே தந்திரமாக நுழைந்துவிட்டால் இகடினமில்லாது இலக்கை எட்டிவிடலாமென அந்தப் பெண் அறிந்திருக்கலாம். இதேநேரம்இ இந்தப் பெண் தாக்குதலை நடத்திய அன்றைய தினந்தான் தனதுடலில் வெடிமருந்தைப் பொருத்தி வந்தாரா அல்லது ஏற்கனவேயும் அவ்வாறு வந்தும் இலக்கை தாக்க முடியாது திரும்பிச் சென்றாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஒரு புறம் இந்தப் பெண்ணை இராணுவத் தலைமையகத்தினுள் தந்திரமாக அனுப்பியவர்கள் மறுபுறம் இராணுவத் தலைமையகத்தினுள் இராணுவத் தளபதியின் நடமாட்டத்தையும் மிக உன்னிப்பாக கண்காணித்துள்ளனர். இராணுவ ஆஸ்பத்திரியைத் தாண்டித்தான் இராணுவத் தளபதியின் அலுவலகம் இருப்பதாலும் இராணுவ ஆஸ்பத்திரிக்கு முன்பாகவுள்ள வீதியால் தான் அவர் அலுவலகத்திற்கு சென்று வருபவர் என்பதாலேயே ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஒருவர் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு வரும் ஆண் நோயாளியென்றால் அவர் இராணுவ அதிகாரியாக அல்லது சிப்பாயாக இருக்க வேண்டும்.தாக்குதலுக்குத் திட்டமிட்டோருக்கு அதற்கு வாய்ப்பில்லையென்பதாலேயே இராணுவ அதிகாரியின் மனைவி போல் பெண்ணொருவர் இந்தத் தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும்இ இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு வரும் நேரங்களும் மதிய உணவிற்காக அவர் வீடு திரும்பும் நேரமும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வரும் நேரங்களில் மாற்றமிருந்தும் திரும்பும் நேரம் பிற்பகல் 1.30 மணியாக இருந்ததால் அவர் திரும்பும் நேரத்தில் அவரைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம்.

அதேநேரம்இ இராணுவத் தளபதியின் அலுவலகம் இருக்குமிடத்தையும் அவர் தனது அலுவலகத்திலிருந்து புறப்படுவதையும் இராணுவ ஆஸ்பத்திரியிலிருந்து பார்க்க முடியாது. இதனால்இ இராணுவத் தளபதி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில் இந்தப் பெண் ஆஸ்பத்திரிக்குள் நின்ற போது இவரது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் இதையடுத்து இந்தப் பெண் ஆஸ்பத்திரியை விட்டுப் புறப்பட்டதாகவும் ஆஸ்பத்திரியிலிருந்த சில பெண்கள் கூறியுள்ளனர். இதனால்இ இராணுவத் தளபதி தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்ட செய்தியை அவரது அலுவலகத்திலிருந்த எவராவது கையடக்கத் தொலைபேசி மூலம் இந்தப் பெண்ணுக்குத் தெரிவித்திருக்கலாமெனவும் கருதும் விசாரணையாளர்கள்இ இது குறித்தும் தீவிர விசாரணை நடத்துவதுடன் அந்தப் பெண் வைத்திருந்ததாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியையும் (அது வெடித்துச் சிதறியிருக்கும்) தேடி வருகின்றனர்.

அதன் ஹசிம்'மை கண்டுபிடித்தால் அந்தத் தொலைபேசிக்கு கடைசியாக எவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததென அறிந்துவிடவும் விசாரணையாளர்கள் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இதேநேரம்இ இராணுவ உயரதிகாரிகள் பலரும் ஒரே விதமான காரையே பயன்படுத்துவதால் காரை வைத்து அதில் வரும் அதிகாரியாரென அடையாளம் காண்பது கடினம். எனவேஇ இராணுவத் தளபதி புறப்பட்ட போது அந்தப் பெண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டே அவர் அந்தக் கார் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக விசாரணையாளர்கள் பெரிதும் நம்புகின்றனர். அத்துடன்இ இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே என்றால் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் காரை தாக்குதல் நடத்துவோரால் இலகுவாகக் கண்டுபிடித்து விட முடியும். வேறு பல வாகனங்களுக்கு மத்தியில் இது வேறாக அடையாளம் தெரியும். ஆனால்இ இராணுவத் தலைமையகத்தினுள்இ இராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் காரெல்லாம் ஒரே மாதிரியானவை என்பதாலும் அவற்றின் கண்ணாடிகள் கறுப்பு நிறமானவை என்பதாலும் காரினுள்ளே இருப்பவரை அடையாளம் காண முடியாதென்பதாலும் தளபதியின் வருகை குறித்து யாரோ தகவல் கொடுத்துத்தான் இந்தப் பெண் தெரிந்திருக்கலாமெனக் கருதப்படுகிறது. மேலும்இ தனது காரின் பின்புறத்தில் வலது பக்க ஆசனத்திலேயே தளபதி இருந்து வந்துள்ளார். அதேநேரம்இ ஆஸ்பத்திரிப் பக்கமாயிருந்து வந்த இந்தப் பெண்இ தளபதியின் கார் தன்னை நெருங்கி வந்த போது அதன் இடது புறத்திலேயே நின்றுள்ளார்.

அத்துடன்இ தளபதியின் காரின் பாதுகாப்புக்காக அதன் முன்புறத்திலும் பின்புறத்திலும் இரு மருங்கிலுமாக மோட்டார் சைக்கிள்களில் நான்கு பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர். இவர்களில் காரின் இடப்பக்க பின்புறம் வந்த பாதுகாப்பு வீரர்இ இந்தப் பெண் காரை நோக்கி வருவதை அவதானித்துஇ வர வேண்டாம். வர வேண்டாமெனக் கத்தியதாகவும் அதனையும் மீறி இவர் வந்த போது மோட்டார் சைக்கிளிலிருந்து படைவீரர் அந்தப் பெண்ணை உதைத்து வீழ்த்தியதாகவும் அப்போதே பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பெண் கீழே விழுந்து குண்டு வெடித்ததால் தான் அதன் தாக்கம் காரின் பின் சீற்றிலிருந்த இராணுவத் தளபதியை மிக மோசமாகத் தாக்கவில்லையெனப் படையினர் கூறுகின்றனர். அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்திருக்கா விட்டால் தளபதிக்கு அந்த இடத்திலேயே உயிராபத்து ஏற்பட்டிருக்குமென்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம்இ காரின் சாரதியும் முன் ஆசனத்திலிருந்த கனிஷ்ட அதிகாரியும்இ காரின் பாதுகாப்பிற்கென வந்த நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழக்க இராணுவத் தளபதி மிக மோசமாகப் படுகாயமடைந்தார். காருக்குள்ளிருப்பவர்களையெல்லாம் மிக மோசமாகப் பாதிக்கச் செய்யும் வகையிலேயே இந்தப் பெண் சக்திமிக்க அதிகளவு நிறை கொண்ட வெடிமருந்தை பயன்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு கருதுகிறது. இதனால் தான் இந்தச் சம்பவத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இலங்கையின் யுத்த வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது இது தான் முதல் தடவை. முன்னரும் இராணுவத் தளபதிகள் இலக்கு வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தாக்குதலுக்கிலĨ


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..