|
இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்..... கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.
உன்னிச்சையிருந்த ராசிக்குழுவினரின் முகாமை அழிக்க அன்ரனியின் உதவியை நாடக்கூடாது என்று கருதிய கருணா அன்ரனியை கரடியனாற்றில் நிறுத்தி விட்டு தானும் செல்லாமல் படையனியை அனுப்பினான். ஆனால் ராசிக்குழுவினரின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாத படையனிகள் கருணாவிடம் இது பற்றி என்ன செய்லாம் எனக் கேட்டனர். ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருந்தனர்.
பிரச்சைனையாகவுள்ளது அன்ரனி நீ போ என கருணா கெஞ்சுவது போல அன்ரனியிடம் கூறினான். அன்ரனியின் வேகமான தாக்குதலால் நிலை குலைந்த ராசிக்குழுவினர் உயிர் தப்பினால் போது என்று சிதறி ஓடினர். இதனால் சக போராளிகள் அன்ரனியை மிகவும் பாரட்டினர். போராளிகளிடத்தில் மட்டுமல்ல மக்கள் இடத்திலும் அன்ரனியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
மட்டக்களப்பு அம்பாறையில் நடந்த ராசிக்குழு மற்றும் இந்திய படை மீதான சன்டைகளை தானே முன்னின்று நடத்தி வெற்றி வாகை சுடியதாக கயவன் கருணா பெயர் வாங்கினான். பல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி அன்ரனி மீது பொய் பிரச்சாரங்களை நடத்தி தலைமையிடம் தான் நல்ல மனிதன் போல பெயர் வாங்கிக் கொண்டான். ஆனால் அன்ரனியுடன் நின்று செயல் பட்டவர்களுக்கும் அவனின் போர் திறனை நேரடியாக கண்டவர்களுக்கும் அவனின் வீரம் புரியும்.
ஏன்! ராசிக் என்ற துரோகி உயிருடன் இருந்திருந்தால் அன்ரனியின் அதிரடித்தாக்குதல்கள் பற்றி அடிக்கடி நினைத்திருப்பான்.
யாழ் மண்ணதும் அன்ரனியவனின் வீரமறியும். யாழ் கோட்டை மற்றும் பலாலிப்பகுதிகளிலும் அன்ரனியின் தாக்குல் வியுகங்கள் அமைந்தன. ஒரு தடவை பலாலியிருந்து முன்னேறிய சிறிலங்கா படைகளை தனது புPஆபு இயந்திர துப்பாக்கியால் தனித்து நின்று தனக்கு உதவி கிடைக்கும் வரை இராணுவத்தினர் மீண்டும் முன்னேற முடியாமல் தடுத்த பெருமை அன்ரனியை சாரும் என பலரும் போசிக் கொன்டனர். மேஜர் அன்ரனியுடன் யாழில் நின்று செயற்பட்ட போராளிகள் அன்ரனியின் இனிமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்வர்;.
1990 காலப்ப்பகுதிகளில் அன்ரனி மட்டக்களப்பிலிருந்திருந்தால் கும்புறுமுலை, களுவாஞ்சிக்குடி இராணுவமுகாம்களின் தாக்குதலகள் தோல்வியடைந்திருக்கமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் அன்ரனிக்கு கருணாவால் பின்னப்பட்ட சதிவலைதன்னை இனம் காட்டி கருணாவுடன் நேரடியாக எதித்தவர்களில் முக்கியாக கருதப்பட்டவர் கிரேக்மாஸ்டர் யார் இவர்? இவரின்பின்னனி என்ன என்று பார்ப்போம். கனேசர் கரிகாலன் என்ற இயற்பெயர் கொண்ட கிரேக்மாஸ்டர் யாழ்ப்பாணம் சன்டியிலிப்பாய்யை சேர்ந்தவர். இயற்கையாவே பண்பும் பணிவும் மற்றவர்களிடத்தில் கனிவுடன் நடக்கும் குணவியல்பும் கொண்ட இவர் நேர்மையற்ற செயல் நடக்கும் போதொல்லாம் அதை தட்டிக்கேட்க தவறுவதில்லை. ஒரு மருத்துவ போராளியாக தென்தமிழித்திற்கு 1987யில் காலடி எடுத்து வைத்தாh.; புலிபாய்ந்தகல் பகுதியிலும் அதன் பின் 1988லிருந்து 1989 வரை அம்பாறையில் மருத்துவ போராளியாகச் செயற்பட்டார்.
இவர் அன்ரனியின் நெருங்கிய நண்பராவார் ஒருதடைவை இவரின் தாயார் யாழ்ப்பானத்திலிருந்து அம்பாறை வந்து இயக்கத்தை விட்டு விலகி வரும் படியும் வெளிநாடு அனுப்புவதாகவும் கூறினார்;. அதை முற்று முழுதாக மறுத்த இவர்; தான் இயக்கத்தையோ சக போராளிகளையோ விட்டு வரமாட்டேன் எனக்கூறி தாயாரை அனுப்பி வைத்தார். அன்ரனிக்கு கருணா செய்த வஞ்சகத்தை எதிர்த்து கருணாவுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு அதே கருணாவால் வஞ்சிக்கப்பட்டார். தனது தாய் அழைத்த நேரம் மறுத்து நின்ற அந்த மனிதன் அன்ரனியின் பிரச்சனையால் மனம் உடைந்து யாழ் சென்றார்.அங்கு சென்று மௌனமாகி விட்டார். ஏன் அவரின் உன்மைகள் மௌனீத்தன என்று தெரியாது! ஆனால் தன்னால் ஏன் இயக்த்திற்குள் பிரச்சைனை என்று நினைத்தாரோ!அல்லது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி ! ஆளை விட்டால்; போதும் என்று நினைத்தாரோ யாருக்கும் தெரியும்!
1990யில் அன்ரனி யாழ்ப்பாணத்தில் நேரடியாக சந்தித்த கிரேக் மாஸ்டர் அன்ரனியிடம் இப்படி கூறினாராம். ஏன்றைக்கோ ஒரு நாளைக்கு இயக்கத்திற்கு கருணா கரியை புசுவான் என்று வேறு சில நெருங்கிய போராளிகளுக்கும் இதை கூறினாராம். தற்போது கிரேக் மாஸ்டர் இயக்கத்தை விட்டு விலகி ஜரோப்பிய நாடென்றில் வாழ்ந்து வருகிறார்.
பலாலிப்பகுதில் இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலென்றில் மேஜர்அன்ரனி என்ற வீரத்தளபதி வீரச்சாவடைந்து விட்டான். தமிழ் தேசிய உணர்வு கொண்டவனும் தலைமைத்துவ அதீத விசுவாசம் கொண்டவனுமான அந்த செயல் வீரனை யாழ் மண்ணது பெருமையுடன் ஏற்றுக் கொண்டது. அன்ரனியின் இழப்பால் அவனை நேசித்தவர்களின் இதயம் கனத்தது. ஆனால் கருணா என்ற துரோகி மட்டும் நிம்மதி பெருமுச்சு விட்டு குதுகலித்தான் என்பது மட்டும் நிஜம்.
கருணா என்ற துரோகி மட்டக்களப்பு மண்ணுக்கு மட்டுமல்ல ஒடடுமொத்த தமிழினத்திற்ம் தன்னை வளர்த்த இயக்கத்திற்கும் தலைவருக்கும் மாபெரும் துரோகமதைச் செய்தான். தன்னிச்சையாக தனது துரோகத்தனத்தை தமிழினத்துற்கு மட்டுமல்ல முழுஉலகத்திற்குமே வெளிப்படுத்தினான். குளிபானம் அருந்திக்கொணடே இயக்கத்திலிருந்து பிரிந்து தான் தனியே செயற்படபோவதாக செய்தி ஊடகங்ளுக்கு பேட்டியளித்தான்.
ஆனால் அன்ரனி மட்டும் அம்பாறையில் அந்நேரத்திலிருந்திருந்தால் குளிர்பானங்கள் என்ன பல பாணங்கள் அருந்த செய்து கருணா என்ற கயவனின் குடலலையே உருவி மாலையாக அணிந்திருப்பான் எனற உண்மை எத்தனை பேருக்குத் தொரியுமோ தெரியாது. கருணாவின் துரோகங்கள் தொடரும்…வாழ்க தமிழ்த் தேசியம்.அன்புடன் ஜரோப்பாவிலிருந்து A.M.T.KUDDY
A.M.T.KUDDY
|