|
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் இறைமை பற்றிய அறிவிப்பி குறித்து எமக்கு கருத்து எதுவும் இல்லை- அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அருண் பிரகாஸ் கூறியுள்ளதாவது:
இலங்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளதால் அண்டைய நட்பு நாடு என்கிற வகையில் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இலங்கை வன்முறைகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறிலங்காவுடனான கடற்படை உறவு நல்ல முறையில் உள்ளது. தமிழ்நாட்டுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி ஊடுருவல் இல்லை. அகதிகள் மட்டுமே வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்புக்கு நாம் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று நாம் தமிழ்நாட்டு மீனவர்களைக் கேட்டுகொண்டுள்ளோம். சில நேரங்களில் கடல் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மீனவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் சிறிலங்கா கடற்படையினருக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். விடுதலைப் புலிகள் கடல் இறைமை உரிமை பற்றி கூறியுள்ளது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம். அதில் எமக்கு கருத்து ஏதும் இல்லை. இந்திய கடற்படையானது இறைமையுள்ள அரசாங்கத்துடன் தான் தொடர்புகளை மேற்கொள்ளும். அரச சார்பற்ற சக்திகளுடன் தொடர்பு கொள்ளாது என்றார் அவர். நெருடல் இணையம்
|