பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow யேர்மனியில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யேர்மனியில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 21 May 2006

ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று எதிர் வரும் 29ம் திகதி யேர்மனி டுசல்டோவ் நகரில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் யேர்மனியின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பேரணி சம்பந்தமாக யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.யேர்மனி டிசுல்டோப் நகரில் பிரதான புகையிரதநிலய முன்றலிலிருந்து 29.05.2006 அன்று காலை 11 மணிக்கு எழுச்சிப் பேரணி ஒன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடமும், அங்கத்துவ நாடுகளிடமும் வலியுறுத்திய தீர்மானத்தைக் கண்டிக்கும் முகமாகவும்,

தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடைபெறும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் நடாத்தப்படும் மனிதப் படுகொலைகள், மனிதஉரிமை மீறல்களை சர்வதேசம் மனிதாபிமான முறையில் கருத்திலெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

கனடா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததை ஆட்சேபித்தும், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவும்.  இப் பேரணி ஏற்பாடாகி இருக்கிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..