பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow பாதுகாப்பு நிலைவரம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

பாதுகாப்பு நிலைவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 22 May 2006

சமாதானத்தை ஏற்படுத்தாத சர்வதேச சமூகம் யுத்தத்தைத் தான் கொண்டு வரப் போகின்றதா?

இலங்கையில் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியாத சர்வதேச சமூகம் இன்று முழு அளவிலான யுத்தத்திற்கு வழிகோலவுள்ளது.

சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவுடன்தான் இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்து சமாதான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதே சர்வதேச சமூகம்தான் இன்று இலங்கையில் வெடிக்கப் போகும் முழு அளவிலான யுத்தத்திற்கும் காரணமாயிருக்கப் போகிறது. சமாதான முயற்சிகளுக்காகத்தான் யுத்த நிறுத்தமென்றால் அந்த யுத்த நிறுத்த காலத்தில் இன்று ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படும் தடையானது யுத்தத்திற்கானதாகத்தான் இருக்குமென்பது தெளிவு. போர் நிறுத்த உடன்பாடு உருவாவதற்கான சூழ்நிலை முதல், இன்று போர் வெடிப்பதற்கான சூழ்நிலை வரையான நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலை போர் நிறுத்த உடன்பாட்டை உருவாக்கியதென்பதையும் எந்தச் சூழ்நிலை போரைத் தோற்றுவிக்கப் போகின்றதென்பதையும் உணர உலகம் தவறிவிட்டது. தமிழ் மக்களின் மிக நீண்ட கால விடுதலைப் போராட்டம்இ ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டமாயிருக்கவில்லை. அடக்குமுறைகள்இ இன அழிப்பு என்பவற்றின் உச்சக் கட்டத்திலேயே தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். இலங்கை இனப்பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் ஆரம்பித்த விடுதலைப் போராட்டம் சுமார் 30 வருடங்களின் பின்னர்தான் ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்த 30 வருடகாலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தவறியதாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது. ஆனால் அதற்கு இன்று பயங்கரவாத முத்திரை குத்தி தமிழ் மக்களின் உரிமைக் குரலை நசுக்க உலக நாடுகளும் முற்பட்டு நிற்கின்றன. விடுதலைப் புலிகளின் பலம், அவர்களை இலங்கைப் படைகளால் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாத நிலை, அரச படைகள் ஆக்கிரமித்த பகுதிகளைப் புலிகள் மீட்டு வந்ததையடுத்தே நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாடொன்றுக்கு முன்வந்தது. ஆனால், 20 வருடகாலப் போரில் வெல்ல முடியாதவர்கள் இந்தப் போர் நிறுத்த காலத்தில் புலிகளைத் தோற்கடிக்க பல்வேறு சதிகளிலும் ஈடுபட்டனர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கவே இந்தப் போர் நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்பட்ட போதும் அதற்கான வாய்ப்புகளே ஏற்படவில்லை. அதற்கு மாறாக முழு அளவிலான போருக்குச் செல்லாது அரசு போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன் படுத்தி புலிகளுக்கெதிராக நிழல் யுத்தத்தை ஆரம்பித்தது.

இந்த நிழல் யுத்தம் ஆரம்பமான போது இதன் முடிவு எவ்வாறிருக்குமென்பது பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டது. நிழல் யுத்தத்திற்குக் காரணமானவர்கள் யாரென்பதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும்இ நோர்வே அனுசரணையாளர்களும்இ முழு உலகமும் அறிந்திருந்த போதும் அதனைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. புலிகளுக்கெதிராகவும் தமிழ் மக்களுக்கெதிராகவும் கருணா குழுவென்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு நடத்திய நிழல் யுத்தம் இன்று முழு அளவிலான யுத்தத்திற்கு காரணமாகிவிட்டது. மோசமான யுத்தம் வெடிக்கப் போகும் நிலையில் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம் காட்டுகிறது. இந்தத் தடை மூலம் புலிகள் முழு அளவில் போருக்குச் செல்வதைத் தடுக்க முடியுமென சர்வதேச சமூகம் கருதுமானால் அது நகைப்புக்கிடமானது. நிழல் யுத்தத்தை நிறுத்த இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று சண்டைக்குப் பதிலாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நிழல் யுத்தம் நடந்த போதும் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் அக்கறைகாட்டிய இந்த சர்வதேச சமூகம், புலிகளைத் தடைசெய்து விட்டு என்ன செய்யப் போகிறது. சர்வதேச சமூகம் முற்று முழுதாக இலங்கைப் படைகளுக்கு ஆதரவு வழங்கினால் புலிகள் மிகவிரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவார்களென்றால், கடந்த 20 வருடகாலமாக இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றிருக்காது. கெரில்லா போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அது அடக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்றோ புலிகள், இலங்கைப் படைகளுக்கு இணையாக முப்படைகளைக் கட்டியெழுப்பிய நிலையில் இந்த யுத்தத்தின் விளைவு எப்படியிருக்குமென எண்ணி சர்வதேசம் அஞ்சுகிறது.

புலிகளைத் தடை செய்வதன் மூலம், இப்பிரச்சினையில் தார்மீக ரீதியில் இதுவரை காலமும் தலையிட்டு வந்த ஐரோப்பிய ஒன்றியம் அதிலிருந்து விலகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புலிகளை இவர்கள் தடை செய்வதன் மூலம் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளிவைத்துவிட்டு முழு அளவிலான போரைத் தொடக்குவதாகவேயிருக்கும். அத்துடன் புலிகளைத் தடை செய்வதாகக் கூறி, இந்தப் பிரச்சினையில் தலையிடும் உரிமையிலிருந்து இவர்கள் தங்களைத் தாங்களே தடை செய்யும் நிலையே ஏற்படும். இனப் பிரச்சினைத் தீர்வுக்கான இணைத் தலைமை நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்று. இதனால், புலிகளைத் தடை செய்வதன் மூலம் இணைத் தலைமை நாடுகளில் இவர்களது நிலை கேள்விக்குறியாகும். இதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளில் சுவீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்தும் அடங்கும். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் அதிகளவிலுள்ளனர். சுவீடனைச் சேர்ந்தவரே இன்று கண்காணிப்புக் குழுவின் தலைவராயிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யுமானால், இவர்களது செயற்பாடுகளும் கேள்விக்குறியாகிவிடும். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியமும் தங்களைத் தடை செய்யுமானால், அது இலங்கையில் முழு அளவிலான யுத்தத்திற்கே வழி வகுக்கும் என்று புலிகளும் எச்சரித்துள்ளனர். புலிகள் போருக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவும் புலிகளின் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவுமே இந்தத் தடையென்றால், போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி அந்த உடன்பாட்டை உதாசீனம் செய்து, நிழல் யுத்தத்தை ஆரம்பித்து, சமாதான முயற்சிகளை சீர்குலைத்து, அப்பாவி மக்களை வகைதொகையின்றி கொன்றொழித்துப் பெரும் போரொன்றுக்கு வழிவகுத்த அரச படைகளதும் அரசினதும் செயற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பதாகவே கருத வேண்டியுள்ளது. கருணா குழுவின் பெயரிலும் துணைப் படைகளின் பெயரிலும் அரச படைகளால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை 300 ஐயும் தாண்டிவிட்டது. தினமும் இனப்படுகொலை நடைபெறுகிறது. கொல்லப்படுவோரெல்லோரும் அப்பாவி மக்களே. இந்தப் படுகொலைகள் குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கும் சர்வதேச சமூகம், கொல்லப்படுபவர்களுக்காக இரங்காவிடினும் கொலையாளிகளின் செயல்களைத் தூண்டாதிருக்க வேண்டுமென்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.

வடக்கு- கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்தப் படுகொலைகள் நடைபெறுகின்றன. அச்சத்தால் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் மக்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக வீடு, வாசல்களைக் கைவிட்டு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குத் தப்பியோடுகின்றார்களென்றால், கொலையாளிகள் யார்? அப்பாவிகள் உயிர்களுக்கு எங்கு பாதுகாப்பு உள்ளது என்பது தெளிவாகும். அண்மைக் காலத்தில் இடம்பெறும் படுகொலைகள் பேரச்சமூட்டுபவையாகவுள்ளன. கூட்டம் கூட்டமாக மக்கள் கொன்றொழிக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் படுகொலைகளைச் செய்கிறார்களென மக்கள் சுட்டிக்காட்டியும் கண்காணிப்புக்குழு, கொலையாளிகள் இவர்கள்தானெனக் கைகாட்ட மறுக்கிறது. வெற்றிலைக்கேணியில் கடற்சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை விட்ட கண்காணிப்புக் குழு 300 இற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இதுவரை கொல்லப்பட்டபோதும் மௌனம் சாதிப்பது, கொலையாளிகளுக்கு மிகவும் வாய்ப்பாகிவிட்டது. கண்காணிப்புக் குழுவின் இந்த மௌனமும் சர்வதேச சமூகத்தின் அலட்சியமும் கொலையாளிகளின் செயல்களைத் தூண்டி வருகிறது. தங்களைப் பாதுகாப்பதானால் எதிரியுடன் மோதவும் தங்கள் மண்ணிலிருந்து எதிரிகளை விரட்டவும் வேண்டுமென்ற நிலைக்கு முழுத் தமிழ்ச் சமூகத்தையும் இன்றைய சூழல் தள்ளிவிட்டுள்ளது. வடக்கு- கிழக்குப் பகுதி முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு என்ற நிலையில் தமிழ் மக்களை அரசு முழு அளவிலான யுத்தத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது. இதனை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டாலும் அது தமிழர் தரப்புக்கெதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையானது, இலங்கையில் இனி சமாதானத்திற்கே இடமில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதிக்குமானால் அது போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமென புலிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை, இனப்படுகொலைகள் மூலமும் யுத்தத்தின் மூலமும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென விரும்பும் சிங்கள இனவாதிகளுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் இது வாய்ப்பாகிவிடும்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது புலிகள் தங்களது தற்பாதுகாப்புக்குக் கூட ஆயுதம் தூக்குவதை தவறெனக் கூறுமென்பதால் இந்தத் தடையானது. ஒட்டுமொத்த தமிழின அழிப்புக்கே வழி வகுத்துவிடுமென தமிழ்ச் சமூகம் பெரிதும் அஞ்சுகிறது. அதைவிட இலங்கை அரசின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் இது ஆதரவளிப்பதாகவே அமையும். வடக்கு, கிழக்கில் கொல்லப்படுவோரெல்லோரும் புலிகள் அல்லது கொலை செய்பவர்கள் எல்லோரும் புலிகளெனக் காட்ட அரசும் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் போட்டி போடுகின்றன. இதுவரை நடைபெற்ற இனப்படுகொலைகளை இவை மூடி மறைத்து வருகின்றன. உண்மையைக் கூறும் ஒரு சில சர்வதேச அமைப்புகளைக் கூட இவை விட்டு வைப்பதில்லை. அவற்றைக் கடுமையாகச் சாடி, அவர்களின் வாய்க்கும் பூட்டுப் போட்டு விடுகிறார்கள். வடக்கு, கிழக்கில் படுகொலைகள் பல்வேறு கட்டங்களிலும் அரங்கேறுகின்றன. கைதுகள், கடத்தல்கள், காணாமல்போதல், கொலைகள், கூட்டாகக் கொலைகளென தமிழ் மக்கள் ஏதோவொரு விதத்தில் கொல்லப்படுகிறார்கள் அல்லது காணாமல் போய்விடுகிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் படையினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணைப் படைகளுமே காரணமென மக்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளனர். தீவுப் பகுதியில் அண்மையில் ஒரே இரவில் 14 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அல்லைப்பிட்டியில் ஒரே வீட்டில் ஒன்பது பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இரவு 8.30 மணியளவில் அல்லைப்பிட்டியில் கடற்படை முகாமுக்கு மிக அருகில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது. கொலையாளிகள் பெற்றோமாக்ஸுடன் வந்து வீட்டிலிருந்தவர்களைக் கொன்றொழித்துவிட்டு மிகச் சாதாரணமாகச் சென்றுள்ளனர்.

தொடரும் படுகொலைகளால் யாழ்.குடாநாடு முழுவதும் மாலை 6 மணியுடன் முற்றாக அடங்கிவிடும். இரவு 7 மணிக்குப் பின்னர் படையினர் மட்டுமே எங்கும் நடமாடுவர். வேறெவரும் வீட்டுக்கு வெளியே கூடவருவதில்லை. ஆனால், இரவு வேளையிலேயே பொதுமக்கள் கூட்டாகக் கொல்லப்படுகிறார்கள். படையினருக்குத் தெரியாது படைமுகாம்களைத் தாண்டியும் சோதனை நிலையங்களைத் தாண்டியும் எப்படி, எவரால் சென்று இவற்றை நடத்த முடிகிறது? இரவு நேரங்களில் வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் செல்லும் கொலையாளிகளை ஏன் படையினரால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது? கண்காணிப்புக் குழுவிடம் பொதுமக்கள் இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் கூறிவருகின்ற போதும் கண்காணிப்புக் குழு ஏன் மௌனம் சாதிக்கிறது? படையினருக்கு எதிராக ஏதாவது தாக்குதலென்றால் பதைபதைத்து கண்டன அறிக்கை விடும் கண்காணிப்புக் குழு அப்பாவி மக்கள் கொல்லப்படும் போதுமட்டும் ஏன் அலட்சியப்படுத்துகிறது? இந்த நிலையில் தான் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளுக்கெதிராக ஹதடை'ப் போர்முரசு கொட்டுகிறது. அவர்களது இந்த நடவடிக்கையால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கு அவர்கள் பதில் கூற வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..