பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு: தமிழ்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு: தமிழ்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 25 May 2006

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை இந்திய மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் தொடங்கியது.அந்த உரையில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு கொள்கை விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.அதில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதும், தொடர்ந்து கவலை அளித்துக் கொண்டிருப்பதுமான  இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்க்கப்பட வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்களின் இந்த அரசு விரும்புகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் உரையிலேயே ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது தமிழீழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்த தமிழ்நாட்டு அரசினது கரிசனையை தொடக்கத்திலேயே வெளிப்படுத்துவதாக உள்ளதாக தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..