|
|
|
புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை |
|
|
|
Monday, 29 May 2006 |
பயங்கரவாதப் பட்டியில் விடுதலைப் புலிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் இணைப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் இயக்கமாக அறிவித்துள்ளது.
பெல்ஜியத்தின் புறுசெல்சில் வழக்கமாக நடைபெறுகின்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இவர்களின் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் உறையில் நிலையில் வைக்கப்படும்.
இச்சொத்து முடக்க நடவடிக்கையானது புலிகளின் போர் முனைப்பை பாதிக்கும் என்றும் இவர்கள் ஐரோப்பாவிற்கான கடந்த கால பயணங்கள் யாவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, இத்தடையானது புலிகளின் முகத்தில் அறைந்த இராஜதந்திர அடியாகும். இவர்கள் தம்மை ஒரு அங்கீகரிக்கபடாத அரசின் ஆற்றல் மிக்க தலைவர்கள் என்ற தோற்றத்தை வெளிநாடுகளுக்குக் காட்ட முனைந்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, பித்தானியா, என்பன விடுதலைப் புலிகளை ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியிருந்தன. கடந்த செப்ரெம்பரில் புலிகள் மீது ஐரோப்பிய பயணத் தடைவிதித்து, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் பயன்படுத்துவதற்கான தடையாகக் கருதப்படுவதாக தெரிவித்திருந்தது.
விடுதலைப் புலிகள் கடந்த மாதம், இரு தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான சமாதானப் பேச்சுக்களை இடைநிறுத்தியிருந்தார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தடையானது போர்ச் சூழலை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என அண்மைய நாட்களில் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்ததோடு சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்ப நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்திருந்தனர்.
பெப்ரவரியிலிருந்து தற்கொலைத் தாக்குதல் தொடக்கம் கடல் சமர் வரையான தாக்குதல்களில் 280 மேற்பட்ட படையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கிளர்ச்சியார்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதனை மென்தீவிர யுத்தம் என விடுதலைப் புலிகள் அழைக்கிறார்கள். இது முழு அளவிலான யுத்தத்தை நோக்கிச் செல்கிறது என்ற அச்சம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நெருடல் இணையம்
|
|