|
தொலைபேசி ஊடாக மனோபல ஆதரவு கொடுங்கள் 0044781 2028 741
பிரித்தானிய அரசின் விசேட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2ம் திகதிமுதல் 6ம் திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வளங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்ச்சியாக நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்குச் சுற்றிவர நிற்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன் ஊடாகப் பெறமுடியுமென்;று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர்களின் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், வாக்குப் போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் பிரித்தானிய அரசியல்வாதிகளுக்குப் புரியும் விதத்தில் தெரியப்படுத்துவதே தனது ப+ரண விருப்பம் எனவும் வடக்குக் கிழக்கின் தமிழர் மீதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமான முறையில் கொல்லப்படுவதையும் முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல் வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும். என்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவைக் கொடுக்க இருப்பதாகவும் அறியமுடிகிறது. தயா இடைக்காடர். ஹரோ. 23 வைகாசி 2006 அன்புடையீர், @ தாயகத்தில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஆவன செய்ய கோரியும், @ இலங்கையின் வடக்கு கிழக்கு மக்;கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கௌரவமான சமாதான தீர்வை வலியுறுத்தியும், @ பிரித்தானியா உடனடியாக மத்தியஸ்தம் வகித்து பேச்சுக்களை ஆரம்பிக்க கோரியும், எதிர் வரும் ஜுன் மாதம் 2ம் திகதி 101மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய பாரளுமன்றத்தின் முன்னால் நான் நடாத்த உள்ளேன்.
1947இல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியை சிங்கள தலைமைகளிடம் ஒப்படைத்த பிரித்தானியா அரசின் கடமைப்பாட்டை உணர்த்தவும் சிங்கள இனத்திற்கு பிரித்தானியாவிடம் இருந்து கிடைத்த சுதந்திரத்திற்கு பின்னர் கடந்த 59 வருடத்தில் உலகில் எங்கும் இல்லாதவாறு 28 வருடம் அவசரகாலசட்டம் இலங்கையில் தமிழருக்கு எதிராக மட்டும் இருக்கின்றது என்பதை உணர்த்தியும் இந்த போராட்டத்தை நான்; பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக செய்ய உள்ளேன் இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களும் பங்களிப்பை நல்குவதுடன், அனைத்து ஊடகங்களும் தமது ஆதரவை தந்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். தங்கள் உண்மையுள்ள தயா இடைக்காடர். தொடர்புகளுக்கு 0044208 933 1031 0044781 2028 741 Thaya10@aol.com nitharsanam
|