|
சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்க் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி கடத்தல் |
|
|
|
Friday, 02 June 2006 |
|
மூதூரில் சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்க் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி கஜேந்திரன் கடத்தப்பட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் முறைப்பாடு செய்துள்ளார்.திருமலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் எழிலன் செய்துள்ள முறைப்பாட்டில்,மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கிய தமிழ் கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரியை கட்டைபறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கடத்திச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமானது சிறிலங்கா இராணுவம் மற்றும் தமிழீழப் பிரதேசங்களை திருமலை மாவட்டம் மூதூர் பிரதேச பகுதியில் பிரிக்கக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது. இக்கடத்தலானது இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்தை மட்டும் பாதிக்கவில்லை- இடம்பெயர்ந்த மக்களுக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவும் செயற்பாட்டையும் பாதித்துள்ளதாக எழிலன் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிழக்குப் பிரதேச பிரதி காவல்துறை மா அதிபரிடம் திருமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கமும் முறைப்பாடு செய்துள்ளார். நெருடல் இணையம்
|