|
சிறிலங்காவில் பாரிய அரசியல் மாற்றத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவாக்காவிட்டால் சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான டொச் தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான ஐரோப்பிய பிரதிநிதியாக உள்ள வன் டிஜிக் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்: அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்க மறுத்தால் சிறிலங்கா அரசாங்கமும் போராளிகள் குழுவும் சர்வதேச ரீதியாக ஓரங்கட்டுப்படுகிற நிலை உருவாகி உள்ளது. நாம் வெறும் இராஜதந்திர மொழியில் மட்டும் கேட்டுக்கொள்ளவில்லை. பேச்சுக்களைத் தொடங்க மறுத்தால் சர்வதேச சமூகத்தினது ஆதரவு கைவிடப்படும். இதுதான் இருதரப்பினருக்குமான ஒரு கடும் நிலையாக நாம் கருதுகிறோம்.
நாம் மனிதாபிமான உதவிகளைப் பற்றி பேசவில்லை. அது எப்போதும் நடைபெறும். முன்னைய நிலைமையிலிருந்து எதுவித மாற்றத்தையும் வெளிப்படுத்தாது இருந்தால் இந்தத் தீவு முழுமையுமே சர்வதேச சமூகத்திடமிருந்து விலகி நிற்கும். மனித உரிமை பிரச்சனைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுக்காது போனால் அனைத்து இணைத் தலைமை நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்கான இராணுவ உதவியை நிறுத்திவிடும். அமெரிக்கா தனது இராணுவ உதவியை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உதவுகிறது. எமது நாட்டினது சட்டங்களைச் செயற்படுத்தினால் எத்தகைய எதிர்விளைவுகள் என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. அமைதியை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளில் பட்டியலில் சேர்ப்பது முக்கியமானது. தடை என்பது எதற்கெனில் அரசாங்கத்திடமிருந்து நாம் எதை எதிர்பாக்கிறமோ அதை விடுதலைப் புலிகள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதுதான். இருதரப்பும் நடைமுறையில் எதுவித தீர்வுக்கும் முன்வராத நிலையில் இணைத் தலைமை நாடுகள் உட்கார்ந்து கொண்டு காத்திருக்கும் பணியைச் செய்ய இயலாது. இந்தச் செய்தியின் உள்ளடக்கம் புரிந்து கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. சிறிலங்கா யுத்தத்தில் மூழ்கும் போது சர்வதேசத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிடும். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பட்டியலில் சேர்ப்பதைவிட இது மிகவும் முக்கியமானது. மகிந்த ராஜபக்சவினது ஏசியன் வோல் ஸ்ற்றீட் ஜேர்னல் இதழின் நேர்காணலில் சொல்லப்பட்டிருக்கும் வர்த்தைகள் போதுமானது இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியமும் இணைத் தலைமை நாடுகளும் கருதுகிறது. சர்வதேச சமூகத்தினது தற்போதைய நிலையை சாதகமாக்கிக் கொண்டு குறிப்பிடத்தக்க நகர்வை அமைதி முயற்சிகளில் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ள வேண்டும். சிறிலங்காவில் பாரிய அரசியல் மாற்றத்தையே நாம் எதிர்பார்க்கிறோம். அத்தகைய நிலையில் அரசியல் சிக்கல்களுக்கு மகிந்த ராஜபக்ச முகம் கொடுக்க வேண்டும். மகிந்தவின் முடிவை குடிசார் நிர்வாகப் பணியாளகர்கள் வெளிப்படுத்த முனைகிறபோது அரசியலிலும் அது எதிரொலிக்கும் என்றார் அவர். நெருடல் இணையம்
|