பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகளின் உயர்குழு ஞாயிறன்று ஒஸ்லோ நோக்கிப் புறப்படுகிறது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 02 June 2006

அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன

எனவும் போக்குவரத்து ஒழுங்குகளை கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் செய்துவருவதாகவும் கொழும்பில் தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்கா ஊடான பயணப் பாதுகாப்பு உறுதி உரிய வகையில் கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணத்தைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினர் முன்னெடுப்பர் எனப் புலிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..