பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வங்காலையில் கிளைமோர்த் தாக்குதல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வங்காலையில் கிளைமோர்த் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 02 June 2006

மன்னார் வங்காலை நானாட்டான் வீதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் படுகாயமடைந்தனர். சிறிலங்காப்படை முகாமை அண்மித்த பஸ்திபுரியில் சிறிலங்காப்படையினரின் இரு சக்கர உழவூர்தியை இலக்குவைத்து நேற்று வியாழக்கிழமை இரவு 7.35மணியளவில் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் லோரென்சியா (வயது 12) என்ற சிறுமியும் அவரது தந்தை ஏ. அருள்நேசனும் (வயது 42) படுகாயமடைந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் லோரென்சியா (வயது 12) என்ற சிறுமியும் அவரது தந்தை ஏ. அருள்நேசனும் (வயது 42) படுகாயமடைந்தனர்.

ஆனால் அப்பகுதியில் நிலைமை மோசமடைந்து இருந்தமையால் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணிக்குத்தான் இருவரும் முருங்கன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கிளைமோர்த் தாக்குதலையடுத்து நறுவிக்குளம் பகுதியைச் சேர்ந்த சுகந்தபுரி, பஸ்திபுரி, சோமாஸ்புரி, பகுதிகளில் சிறிலங்காப்படையினர் நடத்திய தொடர் கெடுபிடி நடவடிக்கைகள் காரணமாக அக்கிராமங்களின் 20 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அகதிகளாக வெளியேறி வங்காலை புனித ஆன் தேவாலயத்தில் அகதிகளாக அடைக்கலமாகியுள்ளனர்.

நறுவிக்குளம் பகுதியில் 245 முதல் 250 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களில் 15 விழுக்காட்டினர் மட்டுமே அங்கு தற்போது உள்ளனர். மற்றவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

உமனகரி தேவாலயத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும்,

ஆவனம் தேவாலயத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும்,

வஞ்சிக்குளம் தேவாலயத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும்

மடுக்கரைக்குளம் பகுதியில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வஞ்சிக்குளம் உறவினர் வீடுகளிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

உமனகரி தேவாலயத்தில் அகதிகளாக உள்ள மக்களை நானாட்டான் பிரதேச செயலாளர் என்.திருஞானசம்பந்தர் மற்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் சென்று சந்தித்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..