பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வந்தாறுமுலை கிளைமோர்த் தாக்குதல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வந்தாறுமுலை கிளைமோர்த் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 02 June 2006

வந்தாறுமூலை களுவன்கேணி தொடரூந்து நிலையத்துக்கு பின்புறம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஓய்வில் இருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மரத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது.இக்கிளைமோர் வெடித்ததில் திலக்ரட்ண (வயது 24) என்ற படைத்தரப்பைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஏறாவூர் சிறிலங்கா காவல்நிலைய பிரதேசத்தில் பணியை முடித்து ஓய்வெடுப்பதற்காக களுவன்கேணி தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மாமர நிழலில் நின்றபோது போது இக்கிளைமோர் வெடித்தது.மட்டக்களப்பு நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் வடபகுதியில் களுவன்கேணி அமைந்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..