|
ஒஸ்லோ கூட்டத்திற்கு முன்னர் ராஜதந்திரிகள் தமிழ்ச்செல்வனை சந்திப்பர் |
|
|
|
Friday, 02 June 2006 |
|
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரை யாடவுள்ளதாக தெரியவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தையில் புலிகள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தநிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது தொடர்பாகவே இராஜதந்திரிகள் தமிழ்ச் செல்வனுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகின்றது. எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்பாக இராஜதந்திரிகள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வார்களெனவும் தெரியவருகின்றது.
நெருடல் இணையம்
|