|
வாழைச்சேனையில் இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் படுகொலை |
|
|
|
Saturday, 03 June 2006 |
|
வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். கருவான்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய பாடசாலை மைதானத்திலிருந்து புறப்பட்ட இக்கும்பல் சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களைப் படுகொலை செய்துள்ளது.வாழைச்சேனை சிறிலங்கா காவல் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.கருவான்கேணியைச் சேர்ந்த டி. விமலேந்திரன்(வயது 34), எம். சித்திரவேல்(வயது 38) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது
நெருடல் இணையம்
|