|
எழுதுமட்டுவாள் கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பில் ஒருவர் பலி |
|
|
|
Saturday, 03 June 2006 |
|
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.முகமாலையின் வடக்கு சோதனைச் சாவடியில் சிறிலங்கா இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் படையினரின் வாகனத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது.
கண்டி- யாழ். ஏ9 வீதியில் குடியிருப்புகள் அற்ற பகுதியான மிருசுவில் மற்றும் முகமாலைக்கு இடையேயான எழுதுமட்டுவாளில் நடந்தது.சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.படுகாயமடைந்த இருவரும் பலாலில் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.சிறிலங்கா இராணுவத்தின் தென் முன்னரங்க காவலரணான வடமராட்சி கிழக்கு கடலோரப் பகுதியை நாகர்கோவிலில் இணைக்கின்ற இடம் எழுதும்ட்டுவாள். இப்பகுதியில் பாரைய பாதுகாப்பு ஏற்பாடுகளை படையினர் செய்திருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெருடல் இணையம்
|