பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மட்டக்களப்பு நிலவரம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மட்டக்களப்பு நிலவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 03 June 2006

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமுலையில் இன்று முற்பகல் இராணுவ காவலரண் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லடிப் பிரதேசத்தில் இன்று காலை இராணுவத்தினரை இலக்கு வைத்து கிளேமோர் குண்டு தாக்குதலொன்றும் நடத்தப்பட்டுள்ள போதிலும் சேதங்கள் எதுவுமில்லை என்றும் அப் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட சம்பவத்தையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களாக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞரொருவர் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளார்.

விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கபபட்ட சிதம்பரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் இன்றிரவு 7.30 மணியளவில் இலங்கைப் போக்குவரத்து சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான 26 வயதுடைய வைத்தியநாதன் விஜிதரன் என்பவர் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அவருடன் உரையாடிக் கொண்டிருந்த 24 வயதுடைய பீதாம்பரம் மோகிலன் என்ற இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைக் கிராமமான ஓமடியாமடுவை அண்மித்த பகுதியில் சிங்கள தொழிலாளிகள் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து ஓமடியாமடு கிராம வாசிகள் அங்கிருந்து வெளியேறி தற்போது மதுரங்குளம் அரசினர் பாடசாலையில் தங்கியுள்ளனர்.

சுமார் 125 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் வரை இடம் பெயர்ந்துள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் கே.கிரிதரன் கூறுகின்றார்.

ஏற்கனவே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் வரை கதிரவெளி அரசினர் பாடசாலையிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


BBC
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..