பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இந்தியா நேரடியாகத் தலையிடாது - பிரணாப் முகர்ஜி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இந்தியா நேரடியாகத் தலையிடாது - பிரணாப் முகர்ஜி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 04 June 2006

இலங்கை இனப்பிரச்சனையில் இராணுவ ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ இந்தியா எக்காரணம் கொண்டும் நேரடியாகத் தலையிடாது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 23 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையிலேயே திரு.முகர்ஜி இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா அரசு அண்மைக் காலமாக இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வலியுறுத்தி வந்திருக்கின்றது. அதேவேளை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளுள் ஒன்றாக இந்தியாவையும் இணைந்து கொள்ளுமாறு ஜப்பான் கோரியிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு ஒரு உயர் தலைவரின் கூற்றாக வந்திருப்பது குறிப்பிடத்தகது. 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..