பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஒஸ்லோ பேச்சில் முட்டுக்கட்டை: இந்தியா கவலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒஸ்லோ பேச்சில் முட்டுக்கட்டை: இந்தியா கவலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 June 2006

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒஸ்லோவில்நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தடைபட்டது குறித்து இந்தியாகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது.

அதில், `போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பங்களிப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டு, அதனால் வன்முறைகள்
அதிகரிக்காமல் தடுப்பதில் அதன் பங்கு குறிப்பிடத்தக்கது.துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்கள் அடிக்கடி நடக்கின்றன' என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலை.  இச் சூழ்நிலையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பங்களிப்பை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்' என்று இந்தியா எச்சரித்துள்ளது.ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை அரசு காட்டிவரும்ஆர்வத்தை வரவேற்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..