|
தனி நாடாக இருக்காத இலங்கையைப் பலவந்தமாக ஒன்றுபடுத்தி, 1833 இல் அப்போதைய காலனித்துவ ஆதிக்க நாடான பிரிட்டன் செய்த திருகுதாளமே இன்றைய இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதை நேற்று இப்பத்தியில் பார்த்தோம். தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் தன் நிர்வாக வச திக்காகத் தான் திணித்த வலோற்கார இணைப்பு நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாதது என்பதை "வெள் ளைக் கனவான்களான' பிரிட்டிஷாருக்கு ஆரம்பத்திலேயே உறைப்பாகப் புரியத் தொடங்கி விட்டது என்பதுதான் உண்மை.
பிரிட்டிஷார் தமது ஆட்சியதிகாரத்தைக் கைகழுவி விட் டுப் புறப்படப்போன போதே இந்திய உபகண்டம் கலவரக் காட்சிகளைக் கண்டது. வெள்ளைக்காரக் காலனித்துவ நாடான இந்தியா, அங்கு இரு தனித்தனித் தாயகங்களை நாடுகளை கண்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என் றும் பிரிந்தது. மலாயாவுக்கும் அதே கதி. ஒருபுறம் மலேசியாவாகவும் மறுபுறம் இலங்கையின் முப்பதில் ஒரு பங்கு அளவு கொண்ட சிங்கப்பூராகவும் அது பிளந்தது. அதன் பின்னர் கூட அது நிற்கவில்லை. சுமார் இரண் டரை தசாப்த காலம் கடந்த பின்பும் பாகிஸ்தான், இரண் டானது. மேற்குப் பாகிஸ்தான் பாகிஸ்தானாகவும், கிழக் குப் பாகிஸ்தான் பங்களாதேஷாகவும் உருவெடுத்தன. இப்படி காலனித்துவ காலத்தில் ஒன்றாக்கப்பட்ட ஆட்சி அதிகார மையங்கள் தத்தமது தனித்துவங்களுக்கு அமைய தாயகங்களுக்கு இணங்க துண்டாகி தனி அரசுகளா னமை புதுமையான ஒன்றல்ல. கண்டிக்கப்பட வேண் டிய ஒன்றுமல்ல. இலங்கைத் தீவின் விவகாரத்தில் இந்த விடயம் சற்று தாமதமாகி யிருக்கின்றது. அவ்வளவே. அதற்கு அடிப்படைக் காரணம் சிங்களப் பெரும்பான்மை யினர் மீது நமது முன்னைய தமிழ்த் தலைமைகள் வைத் திருந்த நம்பிக்கையும், தமிழர்களுக்கே பொதுவான சகிப் புத் தன்மையும்தான். பல கலாசார, பல மத, பல்லின பிராந்தியமாக விளங்கும் இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாகக் காணும் பேரினவாதிகளின் கொடூரப் போக்குக்கு இடம்கொடுக்க முடியாமல் தமது இனத் தாயகத்தின் தனித்துவத்தைச் சிதைத்து, அதை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் சிங்களத் தீவிர வாதத்தின் வலோற் காரத்துக்கு இனியும் இடம்தர முடியாத இக்கட்டில் தங்களின் மொழி உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, கல்வி உரிமை என எல்லா இன அடிப் படைக் கட்டுமானங்களும், வாழ்வியல் உரிமைகளும் சிதைக்கப்பட்ட கையறு நிலையில்தான் தமது இறுதித் தீர்வாகத் தேசத்தை தாயகத்தை மீட் கும் இந்த இனப்போரில் தங்களை ஆகுதியாக்கும் தீர்மானத் துக்குத் தமிழர்கள் வந்தார்கள். இதைக் கூட எடுத்த எடுப்பில் தமிழர்கள் செய்து விடவில்லை. மூன்று தசாப்த காலம் நீதி, நியாயம், உரிமை வேண்டி சிங்கள அரசுகளின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் அஹிம்சை வழியில், சாத்வீக நெறியில், காந் தீயப் பாதையில் போராட்டங்களை நடத்தினார்கள். சர்வ தேசத்தின் கவனத்தை இலங்கைத் தீவின் பக்கம் திருப் பவைத்துத் தமக்கு நியாயம் பெற முயன்றார்கள். ஆனால், அவை எவையும் வெற்றியைத் தரவில்லை. பயன் கிட்டவில்லை. தமிழர்களைப் போல குடிசனத் தொகையிலும், வாழ் விடப் பிரதேசத்திலும் பல மடங்கு பருத்திருக்கும் பெரும் பான்மையினரான சிங்களவர்கள், தமிழர்கள் மீதான அடக்கு முறையைக் கைவிடத் தயாரில்லை என்பதைத் தங்களது ஆதிக்க வெறி மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்தார்கள். இலங்கைத் தீவில் இரு இனங்களினதும் தாயகங் களையும் தமது நிர்வாக முறைமைக்காகப் பலவந்தமாகத் திணித்த பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளோ அல்லது இன்று தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங் கரவாதம்' எனக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி விமர் சித்து, நியாயம் பிழக்கின்ற சர்வதேச சமூகத்தினரோ அஹிம்சை வழியில் தமது உரிமைகளுக்காகத் தமிழர் போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்துக்கு நியாயமான முறையில் ஆதரவு தரவில்லை. சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்து சிறுபான்மைத் தமிழர் களுக்கு நீதிபெற்றுத் தரவேயில்லை. பெரும்பான்மை இனம் என்ற பலத்தை வைத்துக் கொண்டு ஜனநாய கத்தில் உள்ள பின்னடைவான, குறைபாடான தன்மைகளைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளைத் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் சிங் களவர்களிடமிருந்து தமிழர்களுக்கு உரியதைப் பெற்றுக் கொடுக்கப் பூர்வாங்க முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை. இந்த நிலைமையில்தான் தமிழர்கள் தங்களது இறுதி முயற்சியாக வேறு வழி ஏதும் இல்லாத நிலையில் தங் களையே ஆகுதியாக்கும் இந்த விடுதலை வேள்வித் தீயை ஆயுத வழிப் போராட்டமாக முன்னெடுத்தனர். இன்று அதில் கணிசமான வெற்றிகளைக் கண்டு முன்னேறியிருக்கின் றனர். தமிழர் தாயகத்தையும், சிங்களவர் தாயகத்தையும் ஒன் றிணைத்துத் தாம் புரிந்த தவறுக்கு சரியான பிராயச்சித் தத்தைத் தேடித் தராத பிரிட்டனும், அதனுடன் அணிவகுத்து நிற்கும் சர்வதேச சமூகமும், தமிழர்கள் தங்கள் உரிமை களைத் தாங்களே வேண்டி மூன்று தசாப்த காலம் அமைதி வழியில் போராடியபோது அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பக்கபலமாக நின்று அதனை வலுப் படுத்தத் தவறிவிட்டு, இப்போது வேறு வழியின்றித் தமி ழர்கள் ஆயுதப் போராட்ட நெறிமுறையை நாடி, அதில் முன்னேறும்போது அதைப் "பயங்கரவாதமாக' சித்திரிப்பதற்கு எந்த உரிமையும், தகுதியும், தகைமையும் அற்றவை. செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய சமயத்தில் செய் யத் தவறிவிட்டு இப்போது தத்துவம் பிழப்பதில் அர்த்த முமில்லை; நியாயமும் இல்லை. uthayan
|