பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow ஒஸ்லோவில் கிடைத்த பட்டறிவு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒஸ்லோவில் கிடைத்த பட்டறிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 June 2006

ஒஸ்லோ சந்திப்பு பயன்தராமல் முடிவுற்றிருக் கும் சூழ் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிலைமை யைத் தெளிவாக விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றது.இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தின் தற் போதைய புற நிலையை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின் றது அந்த அறிக்கை.

""தோல்வியுற்ற அரசுகளின் பட்டியலில் இருபத் தியைந் தாவது இடத்தை எட்டிப்பிடித்திருக்கும் இலங்கை, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றைப் பேச்சுமூலம் காணும் திறமையும் உறுதிப்பாடும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக் கின்றது.'' என்று சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை அதை நிரூபிக்கும் வகையில் கடந்த கால அனுப வங்களைசம்பவங்களை நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தி, வரிசைப்படுத்தி, தெளிவுபடுத்தி தொகுத் திருக்கின்றது.
""இலங்கையில் தமிழர் தாயகத்தில் எழுபது வீத மான பகுதியில் சுயாதீனமான சட்ட ஒழுங்குகளு டனும் சுதந்திரமாகச் செயற்படும் நீதித்துறையு டனும் பிரத்தியேகமான காவல்துறையுடனும், முழுமையான நிர்வாக ஒழுங்குகளுடனும் தமது கடற்பரப்பிலும் தன்னாதிக்கம் செலுத்தும் ஒரு தனிநாடாக தமிழர் தேசம் விளங்குகின்றது. நவீன பாதுகாப்புப் படைகள் கட்டுமானத்தைக் கொண்டுள்ள தமிழர் தேசத்தின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசத்தினதும் தமிழ் மக்களினதும் தமிழீழ அரசியல் நிர்வாகத்தினதும் பாதுகாவலர்களாக விளங்குகின்றனர்.'' என்ற தற்போதைய யதார்த்த நிலையை தனது ஆரம்பக் குறிப்பாகக்கொண்டு தொடங்கும் இந்த அறிக்கை, ஈழத் தமிழர் களின் சுதந்திரப் போராட்டப் போக்கின் ஒழுங்கையும் அடிப்படைகளையும் வரிசையாகக் கூறிநிற்கின்றது.
நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றைப் பேச்சு மூலம் காணும் திறமையும் உறுதிப்பாடும் தன் னிடம் இல்லை என்பதை இலங்கை அரசுவெளிப் படுத்தி நிற்பதால்
தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கு சுய நிர் ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தன்னை மீள உறுதிப்படுத்தி நிற்கின்றது. என்ற முத்தாய்ப்புடன் அந்த அறிக்கை நிறைவடைந் திருக்கின்றது.
அதாவது, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமை களில் ஒஸ்லோவில் நோர்வே அரசு ஏற்பாடு செய்தி ருந்த சந்திப்புகளும் அவற்றின் பெறுபேறுகளும் சுயநிர்ணய அடிப்படையில் தமது தேசியப்பிரச்சி னைக்கு தீர்வுகாணும் நிலைப்பாட்டை மீள உறுதிப் படுத்தும் நிலைமையைத் தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தி யிருக்கின்றது என்பதே பொருள்.
ஒஸ்லோ சந்திப்பை ஒட்டி இலங்கை அரசுத் தரப்பு நடந்துகொண்ட விதத்தை ஏற்கனவே அம் பலப்படுத்தியிருந்தார் தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப.தமிழ்ச்செல்வன்
""இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு வினரின் பங்கு பணி குறித்துப் பேசுவதற்காக ஒஸ்லோ வந்த இலங்கை அரசுப் பிரதிநிதிகள் குழு, இரண்டு நாள் பேச்சுகளில் பங்குபற்றாமல், முதல் அரைநாளோடு நழுவிச் சென்றமை எமக்குப் பெரும் அதிர்ச்சியை யும் விசனத்தையும் ஆத்திரத்தையும் தருகின்றது. அமைதி முயற்சிகளில் இலங்கை அரசுத்தரப்பின் பொறுப்பற்ற அலட்சியப் போக்கை நிரூபிக்கும் மற்றொரு சம்பவமாக இது அமைந்துள்ளது.'' என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.
இந்த அதிர்ச்சி, விசனம், ஆத்திரம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே புலிகளின் இந்த நீண்ட அறிக்கை வெளிவந்திருக்கின்றது.
அமைதிப் பேச்சு, சமாதான முயற்சிகள், இணக்கத் தீர்வுக்கான எத்தனங்கள் என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே நடந்துகொண்டிருக் கின்றது என்ற விசனம் தமிழர் தரப்பின் மனதில் தீவிரமடைந்து வருகின்றது. ஒஸ்லோ சந்திப்பைப் புறமொதுக்கி, அதைப்பயனற்றதாக்கிய இலங்கை அரசுத்தரப்புப் பிரதிநிதிகளின் செயற்பாடு அதை நிரூபிக்கும் மற்றொரு அம்சமேயன்றி வேறில்லை.
இத்தகைய பொறுப்பற்ற போக்குகள், விட்டேத் தியான அரசியல் செயற்பாடுகள் போன்றவை, தமக் குரிய தீர்வைத் தாங்களே தேடி, போராடிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற உறுதிப்பாட்டைத் தமிழர் களுக்கு மீண்டும் ஏற்படுத்துகின்றன. அந்தப் பற்று றுதியை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாகத் தான் ஒஸ்லோ சந்திப்பும் அங்கு இடம்பெற்ற சம்ப வங்களும் கடந்து சென்றிருக்கின்றன.


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..