|
|
|
ரிபிசி - நடந்தது என்ன? |
|
|
|
Tuesday, 13 June 2006 |
|
கடந்த வியாழன் (08.06.06) ரிபிசி வானொலி அரசியல் அரங்கம் என்ற பெயரில் சிறிலங்கா அரசுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. திடிரென்று நிகழ்ச்சி இடையில் நின்று போய்விட்டது. சிறிது நேரத்தால் வழமைக்கு மாறாக சினமா பாடல்கள் ஒலித்தன. அரசியல் அரங்கம் தொடர்ந்து நடைபெறவில்லை. என்ன நடந்தது என்று வானொலியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரியவில்லை.
வியாழக்கிழமைகளில் நடைபெறும் அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது சில இளைஞர்கள் தமது கலையகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததாக ரிபிசி வானொலி பின்பு அறிவித்தது. விவாதத்தில் கலந்து கொண்டிருந்த விவேகானந்தன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டையும் இளைஞர்கள் மீது சுமத்தியது. வந்தவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சொன்னது. இணையத்தளங்களின் மூலம் அறியப்பட்டவர்களின் சில பெயர்களையும் வெளியிட்டது.
ஆனால் ரிபிசி தெரிவிப்பது போல் இளைஞர்கள் குழப்பம் விளைவிக்கவோ, யாரையும் கொலை செய்யவோ அங்கு போகவில்லை. அவர்கள் அங்கு சென்ற காரணமே வேறு.
தமிழர்களின் பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் 101 மணித்தியால உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் ரிபிசி வானொலி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயா இடைக்காடர் அவர்களை அவரது வயதையும் சமூக அந்தஸ்தையும் பொருட்படுத்தாது கொச்சைப்படுத்தி கீழ்தரமான முறையில் செய்திகளை வெளியிட்டு வந்தது. இது பல தமிழ் மக்களை ஆத்திரமடைய வைத்தது. இது குறித்து ரிபிசி வானொலியிடம் விளக்கம் கேட்பதற்கு சில இளைஞர்கள் முடிவெடுத்தார்கள். இந்த நேரத்தில் வேறொரு விடயமும் இந்த இளைஞர்களால் கருத்தில் எடுக்கப்பட்டது. ரிபிசி வானொலியில் அடிக்கடி விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை "தைரியம் இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்" என்று அழைப்பார்கள். ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்கள் தொடங்கி நேயர்கள் வரை இந்தச் சவாலை விடுவார்கள். தொலைபேசி மூலமாக விவாதிக்க வருபவர்களின் அழைப்பை துண்டித்துக் கொண்டு, இந்த சவாலை விட்டு வேடிக்கை காட்டுவார்கள்.
ஆகவே ஒரு அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கான விளக்கத்தை பெறுவதோடு, ரிபிசி விரும்பியபடி பகிரங்க விவாதத்தில் பங்குபற்றவும் இந்த இளைஞர்கள் தீர்மானித்தார்கள். அரசியல் விவாதம் நடைபெறுகின்ற நேரமே இதற்கு சரியான நேரம் என்று கருதிய இந்த இளைஞர்கள் ரிபிசி வானொலியின் கலையகத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்றார்கள். விளக்கம் கேட்கவும் விவாதத்தில் பங்குபற்றவும் வந்திருந்த இளைஞர்களைக் கண்டதும் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்கள் செய்வது அறியாது விழித்திருக்கிறார்கள். வந்தவர்களில் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்களின் பின்னணிகளை நன்கு அறிந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்ட ரிபிசியினருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. அவர்களுடன் பகிரங்கமாக விவாதிப்பது தமது குட்டுக்களை வெளிப்படுத்திவிடும் என்று ரிபிசியினர் அஞ்சினார்கள். இதனால் செய்திகளை திரித்தே பழக்கப்பட்ட ரிபிசியினர் விவாதிக்க வந்தவர்களை "கொலை செய்ய வந்தவர்கள்" என்று சொல்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள். காவல்துறையினரும் இளைஞர்களை விசாரித்துவிட்டு சில மணி நேரங்களில் விடுவித்து விட்டார்கள்.
இதுதான் நடந்தது. ஆனால் ரிபிசியும், அது சார்ந்த இணையத்தளங்களும் இந்த சம்பவம் குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் எதை நம்ப வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். ஒரு கமெராவை பறித்ததற்கே ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜுக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கிய ஐரோப்பாவில், கொலை செய்ய முயற்சித்து விட்டு சில மணித்தியாலங்களில் வெளியே வந்துவி முடியுமா, webeelam
|
|