|
பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர் |
|
|
|
Tuesday, 13 June 2006 |
|
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருதரப் பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ் தீனத்தில் அதிபர் முகமது அப்பாஸ் கட்சியான பதா கட்சியினருக்கும், ஆளும் தீவிர வாத ஹமாஸ் இயக்கத்தின ருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
ஹாமஸ் இயக்கம் தான் ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித் தது. அந்த இயக்கத்தின் இஸ்மாயில் ஹனிபா பிரதமராக இருக்கிறார்.அதிபரின் ஆதரவா ளர்கள் பிரதமரின் அலுவலகத்துக்கு தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கும் தீ வை த்து விட்டனர். ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த ஒரு எம்.பி.யையும் அவர்கள் கடத்திச் சென் று விட்டனர். கடந்த 3 மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 20 பேர் பலியாகி விட்டனர். நெருடல் இணையம்
|