பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow பிரான்ஸ்சில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டம்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பிரான்ஸ்சில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 June 2006

தமிழீழ தாயகத்தில் எம்மக்கள் மீது நடாத்தப்படும் மிகக் கொடுமையான படுகொலைகளை நிறுத்தக்கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை ஐரோப்பிய அரசு தடை செய்த தை கண்டித்தும் நடாத்தப்படும் கறுப்புப்பட்டி அணிந்த கவனயீர்ப்புப்போராட்டம் பிரான்ஸ் சில் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தொடக்கி வைத் துள்ளனர். 

அதனை தொடர்ந்து பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்பட்டிகளை அணிந்து கொண்டனர். தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு மொழியில் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு சங்கங்கள் ஊடாக பிரெஞ்சு மக்கiளின் கவனத்தையீர்க்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்தவண்ணம் உள்ளன. இத்துடன் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் தமது வேதனை உணர்வுகளை வெளிப்படுத்தி இளையோரினால் தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் வரையிலான அஞ்சல் அட்டைகளை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கும், பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சுக்கும், அனுப்பி வருகின்றனர். இக் கவனயீர்ப்பு போராட்டத்தினையொட்டி வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள், கருத்தரங்;குகள், மாநகர அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. தனியார் அமைப்புக்களும், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். வர்த்தகர் சங்கம் வர்த்தக நிறுவனங்களின் ஊடாக கறுப்புகொடிகளை கட்டி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். இக்கவனயீர்;ப்பு நாட்களை மக்கள் பல்வேறு வழிகளில் எழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..