|
புதிய சமாதான முன்னெடுப்புகள் இல்லை: நோர்வே |
|
|
|
Wednesday, 14 June 2006 |
|
ஓஸ்லோப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் நோர்வே புதிய சமாதான முன்னெடுப் புகளை அனுசரணைப் பணிகளையோ மேற்கொள்ளாது என்று நோர்வே அரசாங்கம் அறிவி த்துள்ளது.சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நோர்வே வெளி விவகார அமைச்சர் ஜோனஸ் கர் ஸ்டோர் கடந்த திங்கட்கிழமை சந்தித்த போது இது தெரிவிக்கப்பட்டதாக நோர்வே போஸ்ட் ஊடகம் நேற்று செவ்வாய்க்கிழமை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.இனப்பிரச்சனையில் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும் அனுசரணையாளர்கள் மட்டுமே தாங்கள் என்றும் மங்கள சமரவீரவிடம் நோர்வே வெளி விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருடல் இணையம்
|