|
தமிழ் மக்கள் யுத்தத்தின் மேல் பற்றுக்கொண்டவர்கள் போன்று சிறிலங்கா சமாதானத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளது என்று காட்டுவதற்கு அரசு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. அமைதி வழியில், சனநாயக வழியில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக உழைக்கும் போது அதனை உதாசீனம் செய்து இராணுவ அடக்குமுறைகளை ஏவி தமிழ் பேசும் மக்களை அடக்கிவிடவே இதுவரை ஆட்சிசெய்த அரசுகள் அனைத்தும் முயன்றன என்பது வரலாறு.
1947முதல் இன்று வரை இதுவே சிங்களத்தின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட, மேற்கொள்ளுகின்ற முறையாகும். தமிழ் மக்கள் மேல் காடைத்தனத்தை ஏவிவிட்டுத் தமிழ் மக்களை அடக்கிவிட எடுத்த முயற்சிகளே 1956முதல் தொடர்ந்த பேரினவாத வன்செயல்களாகும். இதன் பின்னர் ஆயுதப் படைகளைக் கொண்டு தமிழ் மக்களது அறவழிப்போராட்டங்களை நசுக்கிவிட முதலில் முயன்றவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா ஆவார். 1967 பெப்ரவரி 20முதல் ஏப்பிரல் 17வரை அமைதி வழியில் சத்தியாக்கிரகம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தை ஏவி அவசரகாலச் சட்டத்தையும், ஊரடங்குச்சட்டத்தையும் பாயச்செய்து இராணுவ ஆட்சியைத் தமிழ் மண் மேல் நிலை நாட்டியவர் சிறீமாவோ ஆவார். இவரைத் தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் இராணுவ அடக்குமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டதேயன்றி வேறில்லை. இந்த இராணுவ அடக்குமுறைகளிலிருந்து தமிழினத்தை உரிமையுள்ள இனமாகக் காப்பாற்ற வேண்டுமெனில் அதற்கு ஆயுதமே பதில் நடவடிக்கை என்பதை உணர்ந்த தமிழ் இளைஞர்களின் தெரிவாக இருந்தது. எனவே, ஆயுதக் கலாசாரத்தையும், ஆயுத வன்முறையையும் கொண்டு வந்தவர்கள் ஆட்சியாளர்களேயன்றித் தமிழ் மக்கள் அல்லர். ஆனால், இந்த உண்மையை உணராத அல்லது ஏற்காத நாடுகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கூறுவது அந்நாட்டு ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் வரலாற்றை அறியாதவர்களா? என கேட்கத் தோன்றுகின்றது. ஆனால், தமிழர்களது போராட்டத்தை பயங்கரவாதமாகக் கூறும் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்குமாறு கூறுவதும் இங்கு நோக்கப்பட வேண்டியதே. கெரில்லாப் போராகத் தொடங்கி இன்று மரபுவழிச்சமராக வளர்ச்சியடைந்த நிலையில்தான் சர்வதேசம் சமாதான பேச்சுவார்த்தை பற்றிப் பேசத்தொடங்கியது. இரு பகுதியினரும் சமதரப்பு என்ற நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் என்பன தோற்றம் பெற்றன. ரணில் விக்கிரமசிங்க சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டவராவார். அவர் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு சர்வதேச அழுத்தங்கள் மூலம் தாம் விரும்பிய தீர்வை திணிப்பதற்கு வியூகம் வகுத்தார். அதிகாரப் போட்டியில் இருந்த சந்திரிகா அதற்குத் தடைபோட்டு சர்வதேச அழுத்தத்தின் மூலமும் படைமுறை அழுத்தத்தின் மூலமும் தீர்வைத் திணிக்க முயன்றாh.; தற்பொழுது மகிந்த ராஜபக்ச இராணுவத் தீர்வை முன் வைப்பதற்காகவே சமாதானமாக தீர்ப்பதற்கு புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என்று சர்வதேசத்திடம் கூறிவருகின்றார். எப்படிப்பார்த்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள். தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக் கொள்கின்ற நிலையில் எந்தச் சிங்களத் தலைமையும் இருந்தில்லை. இன்று கூட மகிந்த ராஜபக்ச அதே பாணியிலே காய்களை நகர்துகின்றாh.; இதற்கு உதவிடும் வகையில் ஜரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறித் தடை செய்துள்ளது. இதனை எப்படிப்பார்த்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் தீர்வைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள். தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையில் எந்தச் சிங்களத் தலைமையும் இருந்ததில்லை. இன்று மஹிந்த ராஜபக்ச அதே பாணியிலேயே காய்களை நகர்த்தி வருகின்றார். இதற்கு உதவிடும் வகையில் ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறித் தடை செய்துள்ளது. இத்தடையானது சிங்கள ஆட்சியாளர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியுள்ளமை தற்போதைய நடவடிக்கைகள் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. இவற்றின் மூலம் தெரிவது என்வெனில் இலங்கைத் தீவின் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை குறைந்து வருவதுதான். இந்நிலையில் மூஸ்லீம் மக்கள் யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்பினர் பக்கம் சாராது நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்ற குரல் ஒன்று ஒலிப்பதைக் கேட்க முடிகின்றது. இரு இனங்களிடமும் நாம் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு இனத்திற்குச் சார்பாக நடக்கக் கூடாது@ அவ்வாறு நடப்பதனால் மற்றைய இனம் எம்மைப் பகைத்துக் கொள்ளும், என்று கூறுகின்றனர். இங்கே நடுவு நிலைமை என்றால் பக்கம் சாராத்தன்மை என்று பொருள் கொள்ளப்படுகின்றது. எங்கே தவறு உள்ளதோ, எங்கே அடக்குமுறை உள்ளதோ அதைச் சுட்டிக்காட்டி நீதிக்காக குரல் கொடுப்பதே நடுவுநிலமை என்று பொருள்படும். ஆனால், யுத்த தொடங்கி அதில் அரசு வெற்றி பெறுமானால், தமிழரும் முஸ்லீம்களும் அடிமைப்பட நேரிடும் என்றும் புலிகள் வெற்றி பெற்றால் முஸ்லீம்கள் உரிமைகளற்ற இனமாக வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதே குரல் கூறுகின்றது. அவ்வாறான நிலைமை ஏற்படாமலிருக்கச் சமாதான வழியே தேவை என்றும், யுத்தம் தவிர்க்கப் படவேண்டும் என்றும் கூறுகின்றனர். சமாதான வழியில் பேச்சுவார்த்தை மூலம் மூஸ்லீம்களும் உரிமை பெற்று வாழ முடியும் என்று கூறுகின்றனர். சமாதானம் மூலம் உரிமை கிடைக்காமை தொடக்கத்தில் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழ் பேசுமினத்தின் விடுதலைக்கானது என்பதையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமாகும். தென்தமிழீழத்தில் பெருமளவு நிலம் சிங்களக் குடியேற்றத்தால் பறிபோன பொழுது முஸ்லீம் மக்களது உரிமைகள் தமிழினத்தின் உரிமைகளுடன் பறிக்கப்பட்ட பொழுதும் எந்த முஸ்லீம் தலைமையும் எத்தகைய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குச் செல்வதன் மூலம் சமாதான வழிகளில் உரிமைகளைப் பெற முடியாது என்பதை யாராவது மறுத்தால் அவர்கள் அரசியல் நிதர்சனத்தை அறியாதவர்களேயாவர். அதேநேரம் தற்பொழுது கூடச் சமாதானப் பேச்சுவார்த்தை என்று சர்வதேசம் கூற முற்பட்டதற்குக் காரணம் பலம்பொருந்திய நிலையிலிருந்து போர்புரிந்ததே என்பதுதான் உண்மையாகும். எனவே, சமாதானம் என்பது கூடப் போரால் நிகழ்ந்த ஒன்றே அன்றி வெறுமனே கூட்டங்கள் போட்டதால் வந்ததல்ல என்பது தெளிவாகும். எனவே, போரினால் அல்ல சமாதானம் மூலமே என்பது பொருந்தாக்கூற்றாகும். இவ்வாறு கூறி நாடாளுமன்றத்திற்குச் செல்லலாமேயன்றி மூஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பெறமுடியாது. விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப்போராட்டமே அன்றி தனித்து தமிழ் மக்களின் போராட்டம் என்று கூறுவது தவறாகும். தமிழீழம் மலரும் பொழுது அதில் முஸ்லீம்களின் விடுதலையும் அடங்கும் என்பதை எப்பொழுது உணர்கின்றார்களே அப்பொழுதுதான் விடிவு வரும். தியாகம் செய்யாமல் விடுதலை பெறமுடியாது. இதற்குத் தியாகம் இன்றேல் எதிர்காலம் இல்லை என்பதே சான்றாகும். தற்பொழுது அறிவிக்கப்பட்டாத போர் நடந்து கொண்டிருக்கின்றது. சிங்கள நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு அவற்றை யார் செய்கின்றார்கள். என்று ஆராயாது அதற்கு எதிரான தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்துவதன் மூலம் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றை சமாதான ஒப்பந்தம் என்று காரணம் கூறிக்கொண்டு எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ளமுடியும்? இவ்வாறான நிலையில் போர் ஏற்படுவதைத் தவிர்ப்பது யார்? ஆனால், நடுவுநிலை என்று கூறிக்கொண்டு நடக்கும் அட்டூழியங்களை பற்றி எதுவும் கூறாது இருப்பது தப்பித்துக்கொள்ளும் முயற்சியே ஆகும். முஸ்லீம் மக்களது உரிமைகளை அடைய வழி என்ன? அரசியல் தலைமை சரியாகச் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு இதைத்தான். சமாதானம் ஏற்பட வேண்டும் அப்பொழுதுதான் உரிமைகளைப் பெறமுடியும் என்பது பேச்சளவிலேயே சாத்தியமாகும். விடுதலைப்புலிகளின் போராட்டம் அரசால் முறியடிக்கப்பட்டால் முஸ்லீம்களின் உரிமைகளும் கிடைக்காது என்பதனை ஏற்றுக்கொள்கின்றவர்கள் முஸ்லீம்களின் உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை வைத்துள்ளார்களா? மாற்றுவழி எதுவும் அவர்களிடம் கிடையாது. இதை முஸ்லீம் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், முஸ்லீம் அரசியல் தலைமைகள் இவ்வாறான நிலை ஏற்பட்டால் உரிமைகள் கிடைக்காது என்று கூறும் பொழுது தமிழ் மக்கள் வெற்றி பெறுவதையும் விரும்பவில்லை. அவ்வாறு தமிழ் மக்கள் வெற்றி பெற்றாலும் முஸ்லீம்களின் உரிமைகள் கிடையாது என்று கூறுவது விந்தையாகவே உள்ளது. இதிலே வேறு ஒரு முஸ்லீம் அரசியல்வாதி கூறியதையும் இங்கு நோக்குவது நன்றாக இருக்கும். அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் பிரச்சினை ஒன்றுதான். எனவே, சிறுசிறு மோதல்களை மறந்துவிட்டு ஒற்றுமையுடன் பேராடினால் உரிமைகளை இலகுவில் பெற்று விடலாம் என்பது அவரது கருத்தாகும். இந்தக் கருத்தை முஸ்லீம் மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடியவர்கள் நிச்சயம் முஸ்லீம் தலைவர்களாகத்தான் இருக்க முடியும். தமிழ்த் தலைமையால் இந்தக் கருத்தை முஸ்லீம்களிடம் எடுத்துச் செல்லமுடியாது. முஸ்லீம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, விடுதலைப் போராட்டம் ஒரு தீர்வை நோக்கிய பாதைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் சரியான முடிவெடுக்க வேண்டியது முஸ்லீம்களின் கடமையாகும். போர் தமிழ் மக்களுக்கும் சிங்கள அரசுக்கும் மட்டுமே, போரின் பின்னர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தையில் நாம் பங்குபற்றலாம் என்று முஸ்லீம் மக்களைத் தவறாக வழி நடத்துவதை விட்டுவிட்டு தமது விடுதலைக்கான பயங்களிப்பை வழங்க வேண்டிய கடைசிச் சந்தர்ப்பத்தில் முஸ்லீம் மக்கள் உள்ளனர். இது காலத்தின் கட்டாயம். விடுதலைப்புலிகள் வெற்றி பெறுவார்களா? என்ற சந்தேகத்தோடு நடுவுநிலை என்று கூறிக் கொண்டு இருப்பது முஸ்லீம் மக்களுக்கு செய்யும் உபகாரமாக இருக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தில் இணையமுடியாது போனால், தார்மீக ஆதரவையாவது வழங்கவேண்டியது மிக முக்கியமானதாகும். ஆனால், இதைவிடுத்து வெல்லுகின்ற பக்கம் சார்ந்து எதையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து விலாங்கு போல் இருப்பது பலன் எதையும் கொடுக்கப் போவதில்லை. அரசு தற்பொழுது தமிழ்ப் பகுதிகளில் குண்டுகளை வீசி அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. சமாதான அனுசரனையாளர்கள் சரியான முறையில் போர் நிறுத்தத்தை அமுல் செய்யும் படி குண்டு வீச்சை நிறுத்தும் படி கூறவேண்டும். வெறுமனே இரு பகுதியினரும் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவதுடன் நின்றார்களானால் போர் வெடிப்பதை தவிர்க்கமுடியாது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மேல் குற்றம் சுமத்துவதை விடுத்து நேர்மையுடன் நடக்கவேண்டும். அத்தகைய நிலையில் தமிழ் மக்களின் வெற்றியுடன் தாங்கள் உரிமைகளை நிலை நாட்ட முஸ்லீம்களும் இணைவதே உள்ள ஒரே வழியாகும். Battieelanatham
|