|
தமிழர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் சூழலை உருவாக்கவேண்டும் |
|
|
|
Sunday, 25 June 2006 |
|
இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழும் சூழ்நிலையை உரு வாக்க வேண்டும், இனப்பிரச்சினையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணக்கூடாது. இவ்வாறு இந்தியான் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பெங்களுர் நகரில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை இனப்பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணக்கூடாது. பேச்சுக்கள் மூலம் விட்டுக்கொடுப்புடன்தான் தீர்வு காணவேண்டும். இலங்கையின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை இந்தியா ஆதரிக்கிறது. இலங்கையின் இறமையும் பாதுகாக்கப்படவேண்டும்.அதேநேரம் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர்கள் கண்ணித்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய சூழ்நிலையையும் பொதுக்கருத்தையும் உருவாக்க வேண்டுமெனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|