பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow யார் கட்டுப்பாட்டில் கருணா குழு?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யார் கட்டுப்பாட்டில் கருணா குழு? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 27 June 2006
சிறிலங்கா அரசின் அதுவும் முப்படைகளின் தளபதியாக செயற்படு கின்ற சிறிலங்காவின் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்தான் கருணா குழு இயங்குகின்றது என்ற மிகப் பெரியதொரு இரகசியத்தை தன் வாயால் போட்டு உடைத்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ அவர்கள். விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலும் தமிழர் தாயகத்தில் எல்லைப் படைகளாக, தேசிய துணைப்படைகளாக, கிராமிய படையணிகளாக தமிழ் மக்கள் பால், வயது வேறுபாடின்றி ஆயுதப் பயிற்சி எடுத்து வருவது சிங்கள தேசத்தை கிலி கொள்ளச் செய்துள்ளது. மீண்டும் ஒரு போர் உக்கிரமடையும் போது மகிந்தரின் படையணிகள் தமிழர் சேனைகளுடன் போரிட்டு வெற்றி பெற முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டாரோ என்னவோ தற்போது கருணா குழுவை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை சாதாரண விடயமாக கருதி தூக்கி எறிந்து விட முடியாது. பல கேள்விகளுக்கான விடை மகிந்தரின் அந்த வாக்கில் தங்கியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்து போவதற்கு பிரதான காரணம் கருணா குழுவின் அடாவடித்தனமேயாகும்.
    
சிங்களப் படைகளுடன் சேர்ந்திருந்து கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைத்த போது தமிழீழ விடுதலைப்புலிகள் நிலைமைகளை தெளிவுபடுத்தி கருணாகுழு உட்பட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் தமிழர்  தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டுமென திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தனர். ஜெனீவாப் பேச்சுக்களின் போதுகூட கருணா குழு உட்பட ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப கூறி வந்தனர்.
    
ஆனால் படைத்தரப்பிலிருந்து அமைச்சர்கள் சமாதானச் செயலகம், அரச தலைவர் வரை கருணா குழு என்ற ஒரு ஆயுதக் குழு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் விடுதலைப்புலிகள் கட்டுப் பாட்டுப்பகுதியில் தான் உள்ளார்கள் என்ற விதண்டாவாதப் போச்சையே திரும்பத் திரும்பக் கூறி வந்தனர்.
    
இந்த நிலையில் தற்போது கருணா குழு எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது போல அவர்களை கட்டுப்படுத்துவேன் என்ற கருத்துப்பட மகிந்தர் தெரிவித்திருக்கின்றார்.
    
அவ்வாறெனில் இது வரை கருணா குழு மேற்கொண்ட படு கொலைகளுக்கான முழுப் பொறுப்பும் மகிந்தர்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    
போர் நிறுத்தம் சீர்குலைந்து போர் மூழ்வதற்கான சூழல் ஏற்பட்ட போது சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள், இணைத்தலைமை நாடுகள் கூட ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திய போது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று கருணாகுழு விவகாரத்திலிருந்து நழுவல் போக்கையே சிறிலங்கா அரசு கையாண்டு வந்தது.
    
ஆனால் தற்போது தன்வாயால்  தானே கெட்டது போன்று மகிந்தர் கருணாகுழு விவகாரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். தமிழர் தரப்பை பொறுத்த வரை இது ஒரு வெற்றி. யார் வன்முறையாளர்கள.; யார் பயங்கரவாதிகள் என்பதை சர்வதேச சமூகம் இனி இலகுவாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு சூழல் உருவாகும்.
    
இதே வேளை சர்வதேச சமூகத்தின் தலையீடும், நோர்வேயின் அனுசரணையும் எதிர் காலத்தில் நாட்டை இரு பிளவுகளாக்கி விடுமே என்ற பயம் மகிந்தருக்கு அதிகரித்து விட்டது.
    
இராணுவ ரீதியான, பொருளாதார ரீதியான உதவிகளைப் பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை பெறுவது மட்டுமே சிறிலங்கா அரசின் நோக்காகவுள்ளது. அரசியல்  ரீதியான தீர்வு முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டை சிங்கள தேசம் பாதகமாக கருதுவதுடன் அதனை விரும்பவில்லை.
   
இந்த அடிப்படையில் மூன்றாந் தரப்பின் அனுசரணையின்றி விடுதலைப்பு லிகளுடன் பேசுவதற்கு கபடத்த னத்துடன் மகிந்தர் மேற் கொண்ட முயற்சிக்கு கூட விடுதலைப்புலிகள் சரியான பதிலளித்திருக் கின்றார்கள்.  இனி மேல் என்ன செய்யப் போகிறாரோ மகிந்தர்.     


battieelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..