பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 June 2006

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா வின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு  எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத்தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தினரும் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்வதைத் தடுப்பதற்காக தமிழ் நாடு மாநிலப் பொலிஸ் படையைச் சேர்ந்த சென்னைப் பொலிஸ் பிரிவின் "கிவ்" எனப்படும் கடலோரப் பாதுகாப்புக்குப் பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மேற்படி தெல்கா இணையத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி இந்திய இரகசிய பொலிஸ் பிரிவினர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு "ஒப்பறேஷன் புறோவல்" என்னும் பெயரில் விசேட நடவடிக்கை ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் மேற்படி இணையத்தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..