|
இன்று ஒஸ்லோவில் கண்காணிப்பு குழுவின் கூட்டம். |
|
|
|
Thursday, 29 June 2006 |
|
இலங்கையின் எதிர்கால சமாதான நடவடிக்கைகள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் மறுசீரமைப்பு, பாதுகாப்பு தொடர்பான கூட்டம் இன்று காலை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நோர்வேயின் தலைமையில் இலங்கையில் பணிபுரியும் கண்காணிப்புக் குழுவின் அங்கத்துவ நோர்டிக் நாடுகளுக்கிடையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை நோர்வே நேரப்படி 9.00 மணியளவில் இக்கூட்டத்தொடர் ஆரம்பிக் கும் என நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் சுமார் 31/2 மணித்தியாலயம் நேர வித்தியாசம் இருப்பதால் இக்கூட்டத்தின் முடிவுகள் மாலையிலேயே வெளியாகலாம் என தூதரக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இந்தக்கூட்டத்தொடரில் எடுக்கப்படும் முடிவுகளே இலங்கையின் எதிர்கால சமாதான நடவடிக்கைகளில் நோர்வே மற்றும் கண்காணிப்புக்குழுவின் பங்கு மற்றும் அவர்களின் அடுத்த கட்டநகர்வு என்ப வற்றை தெளிவுபடுத்தும் என பெரும்பாலும் எதிர்பாக்கப்படுகின்றது. நெருடல் இணையம்
|