|
Saturday, 24 September 2005 |
|
தோழனாகவும், தொலைபேசித் தகவல்களை சேகரித்து எஜமானுக்கு வழங்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டு, ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுளள அதிநவீன ரோபோ, மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டவர்கள், ரோபோக்களை வடிவமைப்பதில் உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், கார் உற்பத்தியிலும், ரோபோக்களை வடிவமைப்பதிலும் முன்னணியில் இருக்கும் மிட்சுபிசி நிறுவனம், அதிநவீன ரோபோவை டோக்கியோவில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மீட்டர் உயரமுடைய இந்த ரோபோ, அதிகபட்சமாக 10 பேரை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும், அவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடிய திறன் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் தனது எஜமானையும், அவரது குடும்பத்தாரையும் கைகுலுக்கி வரவேற்கும் வகையிலும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு தொலைபேசிக்கு வந்த அழைப்புகள், இ-மெயிலில் வந்திருக்கும் தகவல்கள் ஆகியவற்றை இந்த ரோபோ வாசித்து காண்பிப்பதால், இது ஜப்பானில் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
jaya
|