பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow சந்திரிகாவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சந்திரிகாவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 July 2006
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க புலனாய்வுத்துறையின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு புலனாய்வுத்துறையினர் அனுப்பிய அறிக்கையில் சந்திரிகாவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிர் அச்சுறுத்தல் அறிக்கையில் புலனாய்வுத்துறை இயக்குநர் கிரித்தி கஜநாயக்க கைச்சாத்திட்டுள்ளார். அது காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்து குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 18 முறை சந்திரிகாவுக்கு இலக்கு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பாரிய எதிரியாக சந்திரிகா கருதப்படுவதால் அவரது நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் முன்னாள் அரச தலைவருக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மேலதிக நடவடிக்கைக்காக மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலண்டனில் உள்ள சந்திரிகா விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..