பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow வடக்கில் வெளிநாட்டு கூலிப்படை: கொழும்பு நாளிதழ்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வடக்கில் வெளிநாட்டு கூலிப்படை: கொழும்பு நாளிதழ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 July 2006
வெளிநாட்டுக் கூலிப்படைக் குழு ஒன்று அண்மையில் வடக்கிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:
வடக்கிற்கு அழைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கூலிப்படையில் ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளின் கெரில்லா இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும் உக்ரெய்ன் நாட்டவர்களும் இருக்கலாம் என்று சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் தங்களின் அறிக்கையினூடாக சுட்டிக்காட்டியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான கனரக ஆயுதப் பயிற்சிகள் மற்றும் அதிநவீன ஆயுத கையாள்கை பற்றிய பயிற்சிகளை வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் கூலிப்படையினருக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பெருமளவு பணத்தை வழங்குவதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..