பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை தமிழீழ மக்கள் கொண்டிருக்கின்றனர்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை தமிழீழ மக்கள் கொண்டிருக்கின்றனர். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 26 July 2006

- அமெரிக்க சட்டவாளர்.      
 
தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் கறுப்பு யூலையின் நினைவு சுமந்த எழுச்சிப் பேரணியில் சிறப்புரையாற்றிய அமெரிக்க சட்டவாளர் கரன் பார்க்கர், தேசிய இனம் என்ற வகையில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை, தமிழீழ மக்கள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழீழ மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத போதும், தமிழீழ நிலப்பிரதேசங்களை அமெரிக்க அரசாங்கம் குறிவைப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இது குறித்து தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தென்தமிழீழத்தில் கடற்படை தளம் ஒன்றையும், வடதமிழீழத்தில் விமானப் படைத்தளம் ஒன்றையும் அமைத்து பயன்படுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு திராணியற்ற சிறிலங்கா அரச படைகள், அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் இவர் இவ்வாண்டு மிகவும் துயரம் நிறைந்த வருடமாக விளங்குகின்ற போதும், சில வேளைகளில் தமிழீழ தனியரசு உருவாகுவதற்கு இவ்வாண்டு வழிகோலலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..