பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இருதரப்பிடமும் கோபி அனான் வேண்டுகோள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இருதரப்பிடமும் கோபி அனான் வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 04 August 2006
வடக்கு-கிழக்கில் தற்போது எழுந்து யுத்த நிலைமை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், குறிப்பாக தண்ணீர்ப் பிரச்சினையையடுத்து ஏற்பட்ட யுத்தம் குறித்து அவதானித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
தற்போது இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை இருதரப்பினரும் உடனேயே நிறுத்தி தன்னார்வ மற்றும் மனிதநேய அமைப்புக்களின் நிவாரணப் பணிகளுக்கு  உதவ வேண்டுமெனவும் தடைப்பட்டுப் போயுள்ள பேச்சுக்களைத் தொடங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தற்போதைய நெருக்கடியில் சிறுவர்கள் உட்பட பல பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற செய்தி வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ள கோபி அனான், இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி தண்ணீர் விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..