பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow புலிகளைப்பற்றி பேச வேண்டாமென மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாக பேசுவோம் வைகோஅறிவிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகளைப்பற்றி பேச வேண்டாமென மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாக பேசுவோம் வைகோஅறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 August 2006
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் தொடரும். அவர்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாதென எங்களை மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாக பேசுவோம் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ம.தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில்,

மரண பூமியான இலங்கையில் போராடும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் துணிச்சல் முதலமைச்சருக்கு இல்லை. தமிழகத்தில் வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இலங்கையில் ஆதரிக்கின்றோம். இதற்கு கருணாநிதி மிரட்டுகிறார். தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்போம். அவர்களைப் பற்றி பேசக்கூடாது என மிரட்டினால் அதிகமாக பேசுவோம்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..