|
|
|
மூதூரில் 17 மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் வரலாற்றின் கறைபடிந்த நிக |
|
|
|
Friday, 11 August 2006 |
- மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளர் மூதூரில் பிரான்ஸ் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் 17 மனிதாபிமானப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் சம்பவமானது இலங்கையின் வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வாளர் ரொஹான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப்படுகொலைச் சம்பவத்துடன் படையினரே தொடர்புபட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
மனிதாபிமான அமைப்பாளர்கள் பொது மக்களுக்கு உதவும் போது அரசியலால் பல நெருக்கடிகளை எதிர் கொள்வதையே இச்சம்பவம் காட்டுகின்றது.
வரலாற்றில் இதுவும் ஒரு மனிதாபிமான அமைப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட
மிருகத்தனமான தாக்குதலாகும். மூதூரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீளக்கட்டியமைப்பதிலும் போரால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக உதவுவதை எவ்வாறு நாம் செய்வது? இதற்கு
யார் உதவுவர்? இந்நிலையை எவ்வாறு மாற்றுவது? என திருமலையில் உள்ள
மனிதாபிமான அமைப்பாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இன்றைய அரசியலிலுள்ள சில அரசியல்கட்சிகள் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உணர்வைக் கொண்டுள்ளன.
அத்துடன், இராணுவமும் மனிதாபிமான அமைப்பினரையும் அதன் அதிகாரிகளையும் வடிகட்டுகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது.
இலங்கையில் மட்டுமல்ல, மனிதாபிமான அமைப்பாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது,
வன்முறையாலும் தகவல்களாலும் செல்லும் உதவிகளை தடுப்பதுடன் எட்டு சூடான்
மனிதாபிமான அமைப்பாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சூடானின் டெல்ரான் மாகாணத்திலேயே இவ்வாறு நடைபெற்றுள்ளது. கடந்த ஜூலை
மாதம் சூடானில் உள்ள மனிதாபிமான அமைப்பாளர்களுக்கு மிக மோசமான மாதமாகும்.
அமெரிக்கப்படைகளாலும் அதன் கூட்டுப்படைகளாலும் ஈராக்கிலும் ஆப்கானிலும்
தென்பகுதி மனிதாபிமான அமைப்புகளுக்கு அடிக்கடி இலகுவாக தடையை
விஸ்தரிக்கின்றார்கள்.
சிம்பாப்வேயில் மனிதாபிமான அமைப்பாளர்கள் மீது அரச சட்டசபை இலகுவாக
மீண்டும் மீண்டும் நிபந்தனைகளை கொண்டுவருவதுடன், அமைப்பின் உணவுக்
களஞ்சியம் அடிக்கடி தாக்கப்படுகின்றது.
" உதவி அரசியலாகும் போது எமது நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு இடைவெளி
ஏற்படுகின்றது. இது பெரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். அத்துடன், இது பெரிய
அச்சுறுத்தலாகுமென" ஆபிரிக்காவில் முன்னர் பணிபுரிந்தவரும் தற்போது
திருமலையைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனிதாபிமான அமைப்பின் ஓர் ஊழியர்
தெரிவித்தார்.
உதவிகளின் எல்லைகளை அரசாங்கம் அதிகரிக்கின்றது. அத்துடன், சமுதாய
மாற்றத்துக்கு நீண்ட கால திட்டங்களை மேற்கொள்ளும் போது போராளிக் குழுக்கள்
எப்படியும் பங்கு கொள்ள வேண்டும். இலகுவாக மேற்கொள்ளும் உணவுத்
திட்டங்களுக்கப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
அரசில் பங்குகொள்ளும் ஜே.வி.பி. அடிப்படைவாத பௌத்த அமைப்புக் கட்சியான
ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் அரசியல் அழுத்தங்களால் இலங்கையில்
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான போக்கு உள்ளது.
சுனாமி மீள் கட்டமைப்பு எதிர்பார்ப்புக்கும் பார்க்க மந்தகதியிலேயே
நடைபெறுகின்றது. இதற்கு மனிதாபிமான அமைப்பாளர்கள் அரசாங்கத்தையும்
அரசாங்கம் மனிதாபிமான அமைப்பாளர்கள் மீதும் மாறிமாறி குற்றச்சாட்டைத்
தெரிவிக்கின்றது.
உண்மையில் அரசாங்கம் திட்டங்களை மோசமாக செய்வதனால் வெளிநாட்டு அரச
அரசசார்பற்ற அமைப்புகள் மூலமே தமது திட்டங்களை மேற்கொள்கின்றது என
எதிரிசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 17 பேருடைய கொலைக்கு அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும்.
கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான
அமைப்பாளர்களின் தகவல்களின்படி இக்கொலைகளுக்கு இராணுவத்தினரே பொறுப்பு
என்கின்றனர்.
மூதூர் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளனர் .ஆனால், வன்முறையால்
பாதிக்கப்பட்டது தமிழர்கள்.தமிழர்கள் சுனாமியாலும் போரினாலும்
பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் சிங்கள - முஸ்லிம் மக்களின் மனங்களை
வென்றெடுக்க முடியவில்லை. தற்போது வன்முறையால் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள்
இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் மனங்கள் கடினமாகியுள்ளது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|
|