|
புதுடில்லியில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு- உண்ணாவிரதம் |
|
|
|
Friday, 11 August 2006 |
வட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பு
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற உள்ளது.
அனைத்திந்திய ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் கௌரவ தலைவரான ஜோர்ஜ் பெர்னாண்டசு இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இம்மாநாட்டில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், பீகார்
முதல்வர் நிதிஷ்குமார், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ்
சவுதாலா, ஜம்மு காசுமீர மாநில முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா ஆகியோர்
பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் இம்மாநாட்டுக்கு அழைத்துள்ளனர்.
ஜோர்ஜ் பெர்னாண்டசின் புதுடில்லி இல்லத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளது.
மேலும் இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியில் ஜந்தர் மந்திர் அருகே
இசுரேல், சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க
வலியுறுத்தும் உண்ணாநிலைப் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னாள் இந்திய அமைச்சர் திக்விஜய் சிங் தொடங்கி வைக்கிறார். ஜோர்ஜ் பெர்னாண்டசு முடித்து வைக்கிறார்.
நெருடல் இணையம்
|