பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தமிழன் படைத்த மற்றொரு வீர வரலாறு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழன் படைத்த மற்றொரு வீர வரலாறு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 August 2006

தமிழீழ விடுதலை வரலாற்றில் மற்றொரு திருப்பம். அது தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படை விமானம் சிங்களப் படைகளின் முகாம் மேலாக பறந்து வட்டமடித்து அந்த முகாமில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது பல்வேறு செய்திகளையும் விடுதலைப்புலிகளின் பரிணாமத்தையும் உலகறியச் செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் முப்படை ஆற்றல் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர். விடுதலைப்புலிகளின் விமானம் வன்னி பெரு நிலப்பரப்பிலிருந்து எழுந்து பலாலி படைத்தளத்தை தாக்கி விட்டு திரும்பியிருக்கும் செய்தி திக்கெட்டும் பரவ தமிழர் தாயகம் மட்டுமல்ல புலம் பெயர் வாழ் உறவுகள், ஏன் தமிழகத்திலும் மக்கள் உலாவிக் கொண்டு குதூகலித்து நிற்கின்றனர்.
போர் நிறுத்த உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் காட்டிய கரிசனையும் விடுதலைப்புலிகளை பொறுமை காக்கச் செய்தது.
 
 விடுதலைப்புலிகள் மீது போரைத் தொடுத்து போர் நிறுத்தத்திலிருந்து விடுதலைப்புலிகள் விலகி விடுவார்கள் என சிங்களப் பேரினவாத அரசு கண்ட கனவு பலிக்கவில்லை. பல்வேறு ஆத்திரமூட்டல்களை மேற்கொண்ட போதும் பொறுமையின் எல்லையில் தேசியத் தலைவர் நின்றார் என்றால் அது பெருந்தன்மையல்லவா.
 
 ஆனால், விடுதலைப்புலிகளின் பொறுமைகாப்பை தவறாகப் புரிந்து கொண்டது சிங்களப் பேரினவாதம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை நீக்கியதைத் தொடர்ந்து கருணாவை கருவியாக்கிய சிங்கள அரசு கருணாவின் துணையுடன் விடுதலைப்புலிகளை தோற்கடித்து விடலாம் எனப்போட்ட தப்புக் கணக்குக்கு மாறாக தமிழர் தாயகத்தில் இன்று வீரவரலாறுகள் விடுதலைப்புலிகளால் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் இப்போது சிங்கள தேசம் திக்குமுக்காடுகின்றது.
 
 விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகள் தடை செய்து விட்டால் போதும் அவர்கள் பலவீனமடைந்து விடுவார்கள் எனக் கருதிய மகிந்தர் அரசு வெளிநாடுகளிடமிருந்து ஆயுத வகைகளுடன் வான் வெளித்தாக்குதல்களையும்நடத்தி விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம். இழந்த பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம் என போட்ட தப்புக் கணக்குக்கு இன்று வடபுல போர் அரங்கில் கள யதார்த்தங்கள் சரியான பாடங்களை புகட்டிக் கொண்டிருக்கின்றது.
 
 மகிந்தர் கால் நிமிர்ந்து நிற்பதற்கான சந்தர்ப்பங்கள் பல இருந்தும் ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகிய இரு கட்சிகளின் இனவாத சிந்தனைகளைத் திரட்டி மகிந்தர் சிந்தனை என வடிவமிட்டு மிகப் பெரியதொரு தமிழ் இன அழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டபோதும் புலிகள் பொறுமை காத்தனர். அதனை அரச தரப்பு அலட்சியம் செய்ததன் எதிரொலிதான் இன்று ஏற்பட்டிருக்கின்ற விடுதலை வரலாற்று சாதனை. சிங்கள இனவாத சிந்தனை உடைய எந்த அரசும் தமிழ் மக்களது அபிலாசைகளை தீர்க்கின்ற தீர்வினைப் பெற்றுத்தரப் போவதில்லை.
 
 இது கடந்த கால வரலாறு காட்டும் உண்மை. தமிழனை தமிழனே ஆளுகின்ற சுதந்திர தாயகம் அமையப் பெறும் போது மட்டும் தான் தமிழினத்துக்கு விடுதலை கிடைக்கும்.
 
 இதனை அடைவதற்கான அந்த இறுதிக் கட்டம் இப்போது நெருங்கி விட்டது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழினத்தை கொடுமைப்படுத்துகின்ற எதிரி அழிக்கப்படுகின்ற அல்லது விரட்டப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
 எனவே, போருக்கான களமுனைகளை சிறிலங்கா அரசு தான் திறந்துள்ள நிலையில் இன்னும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, போர் நிறுத்தம் என்பது இப்போது இனி எப்போதும் இல்லை. நாலாம் கட்டப் போர் ஆரம்பமாகி விட்டது. வெற்றிச் செய்திகளை களமுனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது தான் இன்றைய யதார்த்தம். 
battinatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..