|
முல்லைப் படுகொலை: சென்னையில் 17 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலைப் போராட்டம் |
|
|
|
Monday, 14 August 2006 |
முல்லைத்தீவில் சிறிலங்காவின் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 17ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளது.
சேலத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 17 ஆம் நாளன்று மதுரையில் நடைபெற இருந்த விடுதலைச்
சிறுத்தைகளின் "தமிழர் எழுச்சி" மாநாடு இரத்துச் செய்யப்பட்டு அன்றைய
நாளில் சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் சிங்கள
அரசின் இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.
நெருடல் இணையம்
|