பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow முல்லைத்தீவில் குண்டுவீச்சுக்கு இலக்கான பிரதேசம் இராணுவ இலக்கல்ல
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முல்லைத்தீவில் குண்டுவீச்சுக்கு இலக்கான பிரதேசம் இராணுவ இலக்கல்ல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 August 2006
- கண்காணிப்புக் குழு

சிறிலங்கா அரசால் கூறப்படுவது போன்று குண்டுவீச்சுக்கு இலக்கான பிரதேசம் ஒரு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரதேசம் அல்ல என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் கென்றிக்சன் தெரிவித்துள்ளார். செஞ்சோலை வளாகத்தின் மீது இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் குறித்து எம்.ரி.வி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தாக்குதலுக்கு உள்ளான இடத்திற்குச் சென்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 10 குண்டுகள் வீழ்ந்து வெடித்த இடங்களையும், வெடிக்காமல் இருக்கும் ஒரு குண்டையும் கண்ணுற்றனர்.

அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினர் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விவரம் கணக்கிடப்பட்டு வருகின்றது. கணக்கெடுப்பு இன்னமும் முடியவில்லை. 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் உண்மையாகவே இருக்கும்.

அப் பிரதேசத்தைப் பார்வையிட்டதன் மூலம் இது இராணுவ நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படும் ஒரு பிரதேசமல்ல என்பதை காணக்கூடியதாக இருந்தது என்றார் அவர்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..