|
சிறிலங்காவை ஒரு பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்துமாறு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் |
|
|
|
Monday, 14 August 2006 |
"சர்வதேச சமூகம் தனது வழமையான மௌனத்தைக் கலைத்துவிட்டு, சிறிலங்காவை ஒரு பயங்கரவாத அரசாங்கமாக பிரகடனப்படுத்தவேண்டும்" என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது சிறிலங்கா வான்படை மேற்கொண்ட
கொடூரமான கொலைவெறித் தாக்குதலில் 63 பெண் சிறார்கள் கொல்லப்பட்டு, 129
பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள
அறிக்கையிலேயே மேற்கண்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல் உட்பட, அல்லைப்பிட்டித்
தேவாலய தாக்குதல், திருகோணமலை வான் தாக்குதல்கள் போன்ற சிறிலங்கா
ஆயுதப்படைகளின் கொலை வெறியாட்ட விபரங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையில்,
அப்பாவித் தமிழ் மக்களை தொடர்ந்து படுகொலை செய்யும் தீர்மானத்தை சிறிலங்கா
ஆயுதப்படைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் வெளிப்படுத்தி வரும் மௌனத்தையும்
கடுமையாகச் சாடியுள்ள சுவிஸ் வாழ் தமிழர்கள், சர்வதேச சமூகம் தனது வழமையான
மௌனத்தைக் கலைத்துவிட்டு, சிறிலங்காவை ஒரு பயங்கரவாத அரசாங்கமாக
பிரகடனப்படுத்தவேண்டும். சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா அரசை தடைசெய்ய
வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சர்வதேச செய்தி ஊடகங்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் படுகொலைகளுக்கு
முன்னுரிமை கொடுத்து செய்திகள் வெளியிடுவதுடன், சிறிலங்காவின்
கொலைவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படியான அழுத்தத்தை சர்வதேச
சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்னர்.
நெருடல் இணையம்
|