|
முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி |
|
|
|
Tuesday, 15 August 2006 |
முல்லைத்தீவில்
சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள்
படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று
தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: |
இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக
குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட
இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற
செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது.
மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்கப்பட முடியாத
நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு
கருத்துக்கு இடமே இல்லை என்று கலைஞர் கருணாநிதி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|