பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இனியும் விட்டாரம்-வியாக்யானம் பேசி நடுநிலை(?) வகிக்கப் போகிறதா இந்தியப் பேரரசு?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இனியும் விட்டாரம்-வியாக்யானம் பேசி நடுநிலை(?) வகிக்கப் போகிறதா இந்தியப் பேரரசு? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 August 2006
 பேரரசு?: கொளத்தூர் தா.செ. மணி

சிங்களுவருக்கு கொடுத்த ஆயுதம் எதற்குப் பயன்பட்டது என்பதை முல்லைத்தீவு படுகொலைக்கு பின்னராவது இந்தியப் பேரரசு புரிந்துகொள்ளுமா? அல்லது விட்டாரம்-வியாக்யானம் பேசி நடுநிலை(?) வகிக்குமா என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கொளத்தூர் மணி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் வாழிடங்களிலிருந்து அரசாங்கப் படைகள் விலக வேண்டும், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவு, மீன்பிடி உரிமைக்கான தடை நீக்கம் போன்ற எதனையுமே ஏறத்தாழ மூன்றரை ஆண்டு காலம் நிறைவேற்றாமல் வெறும் சடங்காக நடைமுறையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்த நிலையில்- இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் சிங்களப் பேரினவாத அமைப்புகளின் துணையுடன் வெற்று பெற்று மகிந்த ராஜபக்ச குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நாள் முதல் திட்டமிட்டே அவை மீறப்பட்டு சிறிலங்கா அரசாங்கப் படைகளும் துரோகக் குழுக்களும் இணைந்து பொதுமக்கள்- மாணவர்கள்- குழந்தைகள் என ஒட்டுமொத்தமாகத் தமிழர்களைச் சுட்டும் வெட்டியும் கொல்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒருவார காலத்தில் நல்லூரில் 15 பேர்- மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தினர் 17 பேர்- யாழில் 25 பேர் என ஏராளமானபேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த கொடூரத்தின் உச்சமாக ஆகஸ்ட் 14 ஆம் நாளன்று விடுதலைப் புலிகள் பேணிக் காத்துவரும் போரில் பெற்றோரை இழந்த பெண் குழந்தகைளின் காப்பகமான செஞ்சோலை சிறார் இல்லத்தில் சிங்கள வான்படைகள் கண்மூடித்தனமாக குண்டுவீசியதில் 61 மாணவச் சிறுமிகளின் பிஞ்சு உடல்கள் சிதறி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் 130 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

யாழ். மாணவர் விடுதி மீதும் குண்டு வீச்சு- நல்வாய்ப்பாக மாணவர்கள் உயிரிழப்பில்லை.

கல்மனம் கொண்டோரையும் கலங்கச் செய்யும் இந்தக் கொடூரங்களை சிங்களக் காடையர்கள் தங்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கள் குடிமக்கள் மீதே ஈவிரக்கமற்ற முறையில் நிகழ்த்தியிருக்கும் இக்கொடிய தொடர் தாக்குதல்களை பெரியார் திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சிறுவர்களைப் படையில் சேர்ப்பதற்குக் கண்டனம் கூறியும் தடை செய்துமுள்ள அனைத்துலக நாடுகள் அப்பாவிச் சிறுமிகள் கொல்லப்பட்டமைக்கு என்ன எதிர்வினை செய்யப் போகிறார்கள்?

இராணுவக் கருவிகளும் கப்பலும் ஓடுதள சீரமைப்புகளும் ஆயுதங்களும் பயிற்சியும் அளித்த இந்தியப் பேரரசு- அவை எதற்கு பயன்படுத்தப்பட்டவை என்று அறிந்த பின் என்ன செய்யப் போகிறது?

தமிழின மக்கள், குழந்தைகள் இவ்வாறு தாக்கப்படும்போதும் நமது தமிழ்நாடு அரசும் தமிழ் மக்களை தன்னோடு இணைத்துக் கொண்ட இந்திய அரசும் இனியேனும் விழித்திருந்து மனிதத்தன்மையற்ற இவ்வாறான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்து ஈழத் தமிழ் மக்களின் அமைதியான உரிமை வாழ்வுக்கு ஏதேனும் செய்வார்களா? அல்லது விட்டாரம்-வியாக்கியானம் பேசி நடுநிலை(?) வகிக்கப் போகிறார்களா? என மனித உரிமை ஆர்வலர்கள், மனித நேயர்கள்-தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட ஈர நெஞ்சம் கொண்டோர் எழுப்பும் வினாக்களுக்கு வெளிப்படையான நேர்மையான- நேர்மறையான- விடைகளை உரியவர்கள் வழங்கவேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வேண்டுகிறது.

வாழ்க்கையையும் வாழ்வுரிமையையும் இழந்து அல்லலுறும் ஈழத் தமிழர்களுக்கான நமது ஆதரவு உணர்வுகளை எடுத்துக்காட்டும் வண்ணம் தோழர்களும் தமிழக மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம், பேரணி என எல்லாவகையான அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

அதேவேளை அப்பாவித் தமிழ் மாணவர்கள் துடிக்க துடிக்க உடல்சிதறி- கருகி மாண்டதை மறைக்க கொழும்பில் நிகழ்ந்த இராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயற்சிக்கும் சிங்கள வெறியர்களுக்கு எவ்விதத்திலும் குறையாத இந்திய பார்ப்பன ஊடகங்களை இப்போதாவது இனம்கண்டு அவர்களை புறக்கணிக்க உறுதியேற்க வேண்டும் என்று கொளத்தூர் மணி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..