பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 16 August 2006
மனித உரிமைகளை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த போது இதனைத் தெரிவித்தனர்.
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்தும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஈடுபாட்டுடன் செயற்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பேச்சுக்களுக்கு திரும்பவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தினர்.

மனித உரிமைகளை மீறுவோரை சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் வன்முறைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

"சூடான் மற்றும் ஈராக்கில்தான் சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் முதல் முறையாக அத்தகைய படுகொலை நடந்துள்ளது" என்று ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரகங்களின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே முல்லைத்தீவு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள் மங்கள சமரவீர, மகிந்த சமரசிங்க, கேகலிய ரம்புக்வெல ஆகியோர் சிறிலங்காவுக்கான தூதுவர்களை இன்று சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..