பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow முல்லைத்தீவு படுகொலை - பிரபாகரனின் சகிப்புத்தன்மையை சீண்டிப் பார்க்கும் செயல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முல்லைத்தீவு படுகொலை - பிரபாகரனின் சகிப்புத்தன்மையை சீண்டிப் பார்க்கும் செயல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 16 August 2006
- தொல்.திருமாவளவன்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் வகையில் முல்லைத்தீவில் சிங்கள விமானப்படையினர் குண்டு வீசியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் கண்காணிப்பில் நிறுவப்பட்டு இயங்கி வரும் செஞ்சோலை என்ற ஆதரவற்ற பள்ளி வளாகத்தில் சிங்கள இராணுவம் குண்டு வீசியதில் 60-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இறந்துள்ளனர். இது பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

சிறுமிகளை படுகொலை செய்ததை விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த செயலை மத்திய மற்றும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது அவர்களைக் கண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கப் போகிறதா? என்பதை உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

செஞ்சோலையை தாக்கியதன் மூலம் விடுதலைப் புலிகளை போருக்கு வலிந்து இழுப்பது உறுதிப்பட்டு உள்ளது. இதனால் அங்கு உச்ச நிலையில் போர் நடக்கக் கூடிய பேராபத்து உருவாகியுள்ளது. எனவே, சிங்களவர்களின் இனவெறியாட்டத்தைத் தடுக்கவும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதை வலியுறுத்தி சென்னையில் 17 ஆம் தேதி உண்ணாவிரத அறப் போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, எனது பிறந்த நாள் நிகழ்ச்சியான தமிழர் எழுச்சி நாள் நிகழ்ச்சிகளை அன்று தவிர்த்துவிட்டு, அமைதி அஞ்சலி நிகழ்ச்சியாக மாவட்ட தலைமையிடங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..