பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow முல்லைத்தீவு படுகொலை: அமெரிக்க காங்கிரஸ்மான் டெனி கே. டேவிஸ் கடும் கண்டனம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முல்லைத்தீவு படுகொலை: அமெரிக்க காங்கிரஸ்மான் டெனி கே. டேவிஸ் கடும் கண்டனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 17 August 2006
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்க காங்கிரஸ்மான் டெனி கே. டேவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னை கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில் இலங்கைக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்றிருந்த போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இளம் சிறார்கள் காப்பகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த காப்பகம் மீது சிறிலங்கா அரசாங்கப் படைகள் குண்டு வீசிய கொடூரத்தை அறிந்தேன்.
40-க்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நான் அந்த இல்லத்தைப் பார்வையிட்ட போது அந்த இளம் பெண்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருந்தனர்.

யுனிசெஃப்பின் நிர்வாக இயக்குநர் ஆன் எம்.வெனெமன் மற்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வயிட்டு அந்த காப்பகம் அருகே இராணுவ நிலைகள் இல்லை என்று உறுதி செய்துள்ளனர். மன்னிக்க முடியாத இந்த வன்முறைச் சம்பவத்தை நானும் கண்டனம் செய்கிறேன். இந்தக் பயங்கரமான தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சிகளை நிராகரிக்கிறேன்.

அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து சிறார்கள் உயிர் வாழவும் கற்கவும் விளையாடவுமாக பாதுகாப்பளிக்க வேண்டும் என்றார் டெனி கே. டேவிஸ்.
நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..